சிமெண்ட் கார்ப்பரேஷனில் Engineering படித்தவர்களுக்கு வேலை – 45+ பணியிடங்கள்..!

0
சிமெண்ட் கார்ப்பரேஷனில் Engineering படித்தவர்களுக்கு வேலை - 45+ பணியிடங்கள்..!
சிமெண்ட் கார்ப்பரேஷனில் Engineering படித்தவர்களுக்கு வேலை - 45+ பணியிடங்கள்..!
சிமெண்ட் கார்ப்பரேஷனில் Engineering படித்தவர்களுக்கு வேலை – 45+ பணியிடங்கள்..!

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CCI) நிறுவனமானது கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இந்த அறிவிப்பில் Engineer, Officers, CA , CMA பணிகளுக்கு என மொத்தமாக 46 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. எனவே தகுதி உள்ள நபர்கள் இப்பதிவின் மூலம் தேவையான தகவல்களை தெரிந்து கொண்டு உடனே விண்ணப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 31.05.2022ம் தேதி இறுதி நாளாகும்.

CCI வேலைவாய்ப்பு விவரங்கள்:

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CCI) நிறுவனத்தில் காலியாக உள்ள Engineer பணிக்கு என 27 பணியிடங்கள், Officer பணிக்கு என 17 பணியிடங்கள், Chartered Accountant பணிக்கு என 01 பணியிடம், Cost & Management Accountant பணிக்கு என 01 பணியிடம் என மொத்தமாக 46 காலிப்[பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Chemical, Mechanical, Civil போன்ற பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Engineer Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் MBA, CA, ICWA, MBA, Diploma, PG Degree, MSW, Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். Chartered Accountant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் CA Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

Cost & Management Accountant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ICWA Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் கட்டாயம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பை பார்க்கவும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 35 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. SC / ST பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 05 ஆண்டுகள், OBC பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 03 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக தரப்படும்.

இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் UR / OBC / EWS பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.100/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். SC / ST / PWD பிரிவை சேர்ந்தவர்கள் மற்றும் பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்றும் அறிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் நபர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று இப்பணிக்கென்று அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து இன்றே விண்ணப்பிக்க கேட்டுக் கொள்கிறோம்.

CCI Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here