ரூ.1,20,000/- மாத சம்பளத்தில் மத்திய அரசு வேலை ரெடி – விண்ணப்பங்கள் வரவேற்பு!
Senior Consultant, Consultants ஆகிய பணிகளுக்கு என PM-SHRI திட்டத்தின் கீழ் EdCIL (India) Limited-ல் ஏற்பட்டுள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பை CBSE ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,20,000/- மாத சம்பளமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | CBSE – EdCIL |
பணியின் பெயர் | Senior Consultant, Consultants |
பணியிடங்கள் | 06 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
EdCIL பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பின் படி, Senior Consultant பணிக்கென 01 பணியிடமும், Consultant பணிக்கென 05 பணியிடங்களும் EdCIL காலியாக உள்ளது.
Sr. Consultants / Consultants கல்வி விவரம்:
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.
- Senior Consultant – பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree, M.Tech, MBA, PG Diploma, Ph.D, M.Phil
- Consultants – பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree, B.Tech, MBA, PG Diploma, Ph.D, M.Phil, CA, ICWA
Sr. Consultants / Consultants வயது விவரம்:
- Senior Consultant பணிக்கு 40 வயது என்றும்,
- Consultants பணிக்கு 35 வயது என்றும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- Sr. Consultant / Consultants சம்பள விவரம்:
- Senior Consultant பணிக்கு ரூ.1,00,000/- முதல் ரூ.1,20,000/- வரை எனவும்,
- Consultants பணிக்கு ரூ.80,000/- முதல் ரூ.1,00,000/- வரை என்றும் மாத சம்பளம் கொடுக்கப்படும்.
Cognizant நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
EdCIL தேர்வு செய்யும் முறை:
Written Test / PPT, Interview ஆகிய தேர்வு முறைகளின் மூலம் இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
EdCIL விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த EdCIL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google Form-ஐ முழுமையாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். 08.11.2023 என்ற இறுதி நாளுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.