CBSE 10 & 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் – ஜூலை கடைசி வாரத்தில் வெளியீடு? முழு விவரம் இதோ!

0
CBSE 10 & 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - ஜூலை கடைசி வாரத்தில் வெளியீடு? முழு விவரம் இதோ!
CBSE 10 & 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் - ஜூலை கடைசி வாரத்தில் வெளியீடு? முழு விவரம் இதோ!
CBSE 10 & 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் – ஜூலை கடைசி வாரத்தில் வெளியீடு? முழு விவரம் இதோ!

கடந்த கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து வரும் CBSE மாணவர்கள் இம்மாத இறுதியில் தேர்வு முடிவுகளை பெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.

தேர்வு முடிவுகள்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) கடந்த 2021-22ம் கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த கல்வியாண்டில் கொரோனா பரவல் பாதிப்புகள் காரணமாக CBSE மாணவர்களுக்கு 2 பகுதிகளாக பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டது. அந்த வகையில் முதல் டெர்ம் தேர்வானது கடந்த ஆண்டு இறுதியில் நடத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தொடர்ந்து CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான 2வது டெர்ம் தேர்வானது இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தப்பட்டிருந்தது.

Exams Daily Mobile App Download

இப்போது தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று CBSE மாணவர்கள் காத்திருக்கும் வேளையில் ஜூலை மாதத்தில் முடிவுகள் வெளியாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஜூலை கடைசி வாரத்தில் வெளியிடுவதற்கு வாரியம் திட்டமிட்டுள்ளதாக CBSE PRO ராம சர்மா தகவல் அளித்துள்ளார். இருப்பினும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் உறுதியான தேதிகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

பயணிகளுக்காக முன்பதிவில்லா ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

இதற்கிடையில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு குறித்த மதிப்பீடு இன்னும் செயல்பாட்டில் உள்ளது என்றும் வெயிட்டேஜ் குறித்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி, CBSE மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இம்மாத இறுதியில் அறிவிக்கப்பட்டவுடன் மாணவர்கள் அதனை cbseresults.nic.in, cbse.gov.in என்ற இணையதளங்கள் மூலம் சரிபார்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!