சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் – ஜூலை 4 & 10ல் வெளியீடு!

0
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் - ஜூலை 4 & 10ல் வெளியீடு!
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் - ஜூலை 4 & 10ல் வெளியீடு!
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வு முடிவுகள் – ஜூலை 4 & 10ல் வெளியீடு!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி இருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் 4 ஆம் தேதி மற்றும் 10 ஆம் தேதிகளில் வெளியிடப்படும் என மத்திய கல்வித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்:

நாடு முழுவதும் பல மாநிலங்களில் 2 ஆண்டுகளுக்கு பின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. பல மாநில அரசுகள் அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது. வழக்கமாக, மாணவர்கள் தங்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உயர்கல்வியை தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில், தற்பொழுது பல பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கையை தொடங்கி இருக்கிறது

Exams Daily Mobile App Download

இந்நிலையில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி இருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதனை அடுத்து, பொதுத்தேர்வை இரண்டு பிரிவுகளாக நடத்தியதால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு இருப்பதாக மத்திய அரசு விளக்கம் கொடுத்து இருக்கிறது. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட வேண்டும் என பல தரப்பில் இருந்து தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் கவனத்திற்கு – கட்டண நிர்ணய குழு முக்கிய அறிவிப்பு!

இது குறித்து ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பி வரும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி தேர்வு முடிவுகளை விரைவில் வெளியிட அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக சிபிஎஸ்இ விளக்கம் கொடுத்துள்ளது. இந்நிலையில், தற்போது சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதன் படி சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 4 ஆம் தேதியும், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 10 ஆம் தேதியும் வெளியாக இருப்பதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!