CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் LOC தரவுகளை திருத்த உத்தரவு – நவ.30 முதல் டிச.6 வரை அனுமதி!

0
CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் LOC தரவுகளை திருத்த உத்தரவு - நவ.30 முதல் டிச.6 வரை அனுமதி!
CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் LOC தரவுகளை திருத்த உத்தரவு - நவ.30 முதல் டிச.6 வரை அனுமதி!
CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் LOC தரவுகளை திருத்த உத்தரவு – நவ.30 முதல் டிச.6 வரை அனுமதி!

CBSE 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பட்டியலில் LOC தரவுகளை திருத்தம் செய்யுமாறு CBSE வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த LOC தரவுகளை வைத்து மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

LOC தரவுகள்

CBSE பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பரவல் காரணமாக 2021-22 கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட்டது. ஆனால் தற்போது நடப்பு கல்வியாண்டு (2022-2023) முதல் 10, 12ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் ‘ஆண்டு இறுதித் தேர்வு’ (Annual Examination) என்ற பழைய முறையில் நடத்தப்படும் CBSE என வாரியம் அறிவித்துள்ளது. மேலும் CBSE வாரியம் 10ம் மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை வரும் பிப்ரவரி 15ம் தேதி முதல் நடத்த உள்ளதாக முடிவு செய்துள்ளது.

Exams Daily Mobile App Download

இதையடுத்து தற்போது அனைத்து CBSE பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது CBSE 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பட்டியலில் (LOC) திருத்தங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனை நாளை (நவம்பர் 30) முதல் டிசம்பர் 6ம் தேதிக்குள் செய்து முடிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதனை parikshasangam.cbse.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக சென்று அனைத்து CBSE பள்ளிகளும் செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் முதல் முறையாக இந்த 4 நகரங்களில் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் – டிச.1ம் தேதி முதல்!!

Telegram Updates for Latest Jobs & News – Join Now

முதலில் மாணவர்களின் LOC தரவுகளை பள்ளிகள் திருத்தம் செய்யும். அதன்பின்பு இவை மண்டல அலுவலரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். இறுதியாக இவர் ஒப்புதல் அளித்த பின்பு LOCயில் தரவுகள் புதுப்பிக்கப்படும். இந்த LOC தரவுகளை கொண்டு 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு அட்மிட் கார்டு, தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான கல்வி சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!