CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு – 92.71 % தேர்ச்சி விகிதம்!

0
CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - 92.71 % தேர்ச்சி விகிதம்!
CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு - 92.71 % தேர்ச்சி விகிதம்!
CBSE 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு – 92.71 % தேர்ச்சி விகிதம்!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) இன்று சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட்டுள்ளது. எனவே மாணவர்கள் தேர்வு முடிவுகளை எப்படி சரிபார்ப்பது என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு:

கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு CBSE தேர்வு 2 பருவங்களாக நடத்தப்பட்டது. மேலும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ஏற்கனவே பருவம் 1-க்கான முடிவுகளை முன்னதாக அறிவித்துள்ளது. மேலும், சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு 2 வது பருவத் தேர்வுகள் கடந்த ஏப்ரல் 26 முதல் மே 24 ஆம் தேதி வரை நடைபெற்றன. இதை தொடர்ந்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பருவம் 2-க்கான முடிவுகளை இந்த மாத இறுதிக்குள் வெளியிடும் என மாணவர்களும் பெற்றோர்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். குறிப்பாக, , CBSE பருவம் 2 முடிவுகளுடன், பருவம் 1 மற்றும் பருவம் 2-க்கான மதிப்பெண்களையும் இணைத்து CBSE அறிவிக்கும் என தகவல்கள் வெளியானது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் பெற்றோர்கள், மாணவர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக சிபிஎஸ்இ 12 வது வகுப்பு  பருவம் 2-க்கான  தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளது. இப்போது வெளியிடப்பட்ட சிபிஎஸ்இ 12 வது 2022 ன் முடிவுகளின் படி, , திருவனந்தபுரம் 98.83% தேர்ச்சியுடன் சிறந்த செயல்திறன் கொண்ட மண்டலமாக மாறி உள்ளது. இந்த ஆண்டு முடிவுகளில், வாரியம் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 92.71% ஆகும். மேலும்  மாணவர்கள் CBSE-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbseresults.nic.in என்ற இணையதளத்திற்குச் சென்று தங்கள் பள்ளிக் குறியீடு, ரோல் எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றின் உதவியுடன் தேர்வு முடிவுகளை (CBSE Term 2 Result 2022) பார்வையிடலாம்.

கோவில்களில் திருமணம் நடத்த இனி இந்த சான்றிதழ் கட்டாயம் – இந்து சமய அறநிலையத்துறை அதிரடி உத்தரவு!

போர்டு இணையதளத்தை தவிர்த்து, தேர்வு முடிவுகளை DigiLocker, UMANG பயன்பாடு மற்றும் results.gov.in ஆகியவற்றிலும் சரிபார்க்கலாம். ஒரு மாணவரின் இன்டர்நெட் சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ அல்லது யாரேனும் இணைய வசதி இல்லாமல் போனாலோ, அந்த மாணவர்களும் எஸ்எம்எஸ் மூலம் மதிப்பெண்ணை சரி பார்க்க முடியும். எஸ்எம்எஸ் உதவியுடன் முடிவைச் சரிபார்க்கும் வழி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படிகள் மூலம் தேர்வு முடிவை சரிபார்க்கலாம்:

  • முதலில் உங்கள் மொபைலில் cbse 10/12 (roll no) (school no) (center no) வடிவத்தில் செய்தியை டைப் செய்யவும்.
  • இப்போது தட்டச்சு செய்த செய்தியை 7738299899 க்கு அனுப்பவும்.
  • உங்கள் 10வது, 12வது முடிவுகள் திரையில் தோன்றும். பின்னர், மதிப்பெண் அட்டையை சரிபார்க்கவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!