CBSE 10th Result 2021 – ஆகஸ்ட் 2ல் வெளியீடு?

0
CBSE 10th Result 2021 - ஆகஸ்ட் 2ல் வெளியீடு?
CBSE 10th Result 2021 - ஆகஸ்ட் 2ல் வெளியீடு?
CBSE 10th Result 2021 – ஆகஸ்ட் 2ல் வெளியீடு?

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள நிலையில், இறுதி முடிவுகள் அடுத்த வாரம் அதாவது ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) ஏற்கனவே அறிவித்திருந்த படி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி முடிவுகளை நேற்று (ஜூலை 30) வெளியிட்டது. எனினும் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளின் வெளியீடு தேதி குறித்த எவ்வித தகவல்களையும் கல்வி வாரியம் அறிவிக்கவில்லை. இதனால் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என மாணவர்களிடையே எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், CBSE 10 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் ஆகஸ்ட் 2 ஆம் தேதியில் வெளியாகும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கிறது.

Tokyo Olympics: வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை கமல் பிரீத் கவுர் இறுதிப்போட்டிக்கு தேர்வு!

அதாவது CBSE 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை ஜூலை 31 ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்பதால், 10 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களை கணக்கீடு செய்யும் பணி ஒத்திவைக்கப்பட்டது. இப்போது +2 தேர்வு முடிவுகள் வெளியானதால், CBSE கல்வி வாரியம் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான வேலையை தொடங்கும் என்றும் அடுத்த வாரத்திற்குள் மதிப்பெண்களை வெளியிட முயற்சிப்பதாகவும் CBSE தேர்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

இதனிடையே பெரும்பாலான பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் CBSE வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டு, இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தவிர, சுமார் 700 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் வழங்கப்பட்ட மதிப்பெண்களை மறுபரிசீலனை செய்யும்படி CBSE வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு படிக்கும் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் இறுதி முடிவுகள் தற்போது நிலுவையில் உள்ளதாகவும், இந்த முடிவுகள் ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!