CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு? முக்கிய ஆலோசனை!

3
CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு? முக்கிய ஆலோசனை!
CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு? முக்கிய ஆலோசனை!
CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைப்பு? முக்கிய ஆலோசனை!

மே 4ம் தேதி முதல் CBSE பாடத்திட்ட 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் அதனை ஒத்திவைக்கக்கோரி பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனை நடத்தி உள்ளது.

CBSE பொதுத்தேர்வுகள்:

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் காலவரையின்றி மூடப்பட்டது. மேலும் மாணவர்களின் நலன் கருதி ஆண்டு இறுதித்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளை நடத்த மத்திய கல்வி அமைச்சகம் முடிவு திட்டமிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது.

TN Job “FB  Group” Join Now

தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் தினசரி 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. மேலும் உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் பள்ளி இறுதித்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் வருகிற மே 4ம் தேதி முதல் CBSE மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ளன.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கண்காணிப்பு – 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!!

இதனை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆலோசனை நடத்திய மத்திய கல்வி அமைச்சகம் தேர்வுகளை ரத்து செய்ய வாய்ப்பில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் CBSE தேர்வுகளை ஒத்திவைப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது தொடர்பான அதிகாரப்பூரவ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

3 COMMENTS

  1. 😶😶😶what is going to happen??. Will cbse cancel board exam for 10th and 12th?? or only for 10th?? or keep the exam??.The virus is rising beyond its limit. And every students had studied in online. Then how it correct to keep test alone in offline. What is going to happen .let’s wait and watch.

  2. Please cancel the board exams as causes great difficulty to the students in attending the exams during such a worse situation the government must consider the students health and not only it’s duty.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!