CBSE 10, 12 வகுப்பு மாணவர்களுக்கான 2023 பொதுத்தேர்வு – அட்டவணை வெளியீடு!

0
CBSE 10, 12 வகுப்பு மாணவர்களுக்கான 2023 பொதுத்தேர்வு - அட்டவணை வெளியீடு!
CBSE 10, 12 வகுப்பு மாணவர்களுக்கான 2023 பொதுத்தேர்வு - அட்டவணை வெளியீடு!
CBSE 10, 12 வகுப்பு மாணவர்களுக்கான 2023 பொதுத்தேர்வு – அட்டவணை வெளியீடு!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 2022-2023ம் கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வுகள் அட்டவணை தெரிவிக்கப்படுவது பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு:

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தனது 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டில் கொரோனா காரணமாக பொதுத்தேர்வில் எந்த வித தடையும் ஏற்பட்டு விடாமல் இருப்பதற்காக 2 பிரிவுகளாக நடத்தியது. ஆனால் தற்போதைய கல்வி ஆண்டில் கொரோனா தொற்று பரவல் பாதிப்பு குறைந்து விட்டதால், பழைய படியே பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை பிப்ரவரி 15ஆம் தேதி முதல் நடத்தும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவால் உலகளவில் 65.42 கோடிக்கும் அதிகமானோர் உயிரிழப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்!

தேர்வுகள் தொடங்குவதற்கு 45 நாட்கள் முதல் ஒரு மாதம் முன்னதாக மாணவர்கள் இறுதித் தேர்வுக்குத் தயாராகும் வகையில் தேர்வின் அட்டவணை வெளியிடப்படும். மேலும், கடந்த ஆண்டு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் , நடப்பாண்டில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது வழக்கமாக நடப்பது போல் 100% பாடத்திட்டத்தின் படி தான் தேர்வுகள் நடக்க உள்ளது.

Exams Daily Mobile App Download

இந்நிலையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான 2022 – 2023 கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணை டிசம்பர் மாத இறுதியில் அறிவிக்கப்படும் என்றும் தற்போது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், 2019ம் ஆண்டு முதல் 80 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என்பதால், 20 சதவீத மதிப்பெண்கள் உள் மதிப்பீடு அல்லது செய்முறைத்தேர்வுகளுக்கு அளிக்கப்படுகிறது. இதே போல் தான் நடப்பு ஆண்டில் தேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!