CBSE 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – மத்திய கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!!

0
CBSE 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மத்திய
CBSE 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மத்திய
CBSE 10 & 12ம் வகுப்பு பொதுத்தேர்வு – மத்திய கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு!!

கொரோனா ஊரடங்கு காரணமாக பிப்ரவரி மார்ச் மாதங்களில் நடத்தப்படும் 10 மற்றும் 12 வகுப்பிற்கான சிபிஎஸ்இ தேர்வுகள் இந்த வருடம் நடத்துவதற்கான அட்டவணை இன்னும் வெளியிடாத காரணத்தால் தற்போது மாணவர்கள் மத்தியில் எழும் குழப்பத்தை போக்குவதற்காக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் சமூக வலைத்தளத்தில் நேரலையில் டிசம்பர் 22 மாலை 4 மணிக்கு வருவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார்.

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு:

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பொதுவாக பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துகிறது. கொரோனா தொற்றுநோய் காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கவோ அல்லது ரத்து செய்யப்பட மாட்டாது என்று கல்வி அமைச்சகம் உறுதிப்படுத்திய போதிலும், சிபிஎஸ்இ இன்னும் வரவிருக்கும் தேர்வுகளுக்கான தேதி அட்டவணையை வெளியிடாததால் நாடு முழுவதும் மாணவர்கள் தேர்வுகள் குறித்து கவலை கொண்டுள்ளனர்.

மாணவர்கள் கவலையுடனும் குழப்பத்துடனும் இருப்பதைக் கண்ட கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், தனது சமூக ஊடக கணக்கில் நாளை டிசம்பர் 22 ஆம் தேதி மாலை 4 மணிக்கு ட்விட்டர் அல்லது பேஸ்புக்கில் ஆசிரியர்களை உரையாற்றவும், கவலைகள் குறித்து விவாதிக்கவும் உள்ளதாக தெரிவித்தார். மேலும், அவர் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான அட்டவணையை அறிவிக்கக்கூடும் என்று வதந்திகள் பரவி வருகின்றன.

இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கான உடனடி பணி நியமன ஆணை – தமிழக வேலைவாய்ப்பு துறை அறிவிப்பு!!

இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அமைச்சர் போக்ரியால் கூறித்தாவது,” சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் வழக்கம் போல் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கோவிட் -19 வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்படும். இருப்பினும், தொற்றுநோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாவிட்டால், அவர்கள் தேர்வுகளை தாமதப்படுத்தக்கூடும். COVID-19 வழிகாட்டுதல்களை மனதில் கொண்டு, சிபிஎஸ்இ 2021 ஆம் ஆண்டில் மாணவர்களின் அந்தந்த பள்ளிகளில் வழக்கம் போல் நடைமுறைத் தேர்வுகளை நடத்தும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் மாணவர்கள் பொது தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் பள்ளிகளை மீண்டும் திறக்கும்படி அவர் கோரிக்கை விடுத்தார்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!