சிபிஎஸ்சி 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – ஜூலை 13ல் வெளியீடா ??
சிபிஎஸ்சி 10,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல் பொய்யானது என அறிவிப்பு உள்ளது.
தேர்வுகள் ரத்து :
கொரோனா பரவல் தீவிரமடைந்ததை தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நீதிமன்றத்தை அணுகிய பிறகு சிபிஎஸ்இ நிர்வாகம் 10 மற்றும் 12ம் வகுப்பு அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தது. மேலும் ஏற்கனவே நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது.
சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்:
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 13ம் தேதியும், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 11ம் தேதியும் வெளியிடப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல் பொய்யானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.