CBSE மாணவர்களின் கவனத்திற்கு – 10, 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு!

0
CBSE மாணவர்களின் கவனத்திற்கு - 10, 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு!
CBSE மாணவர்களின் கவனத்திற்கு - 10, 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு!
CBSE மாணவர்களின் கவனத்திற்கு – 10, 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வெளியீடு!

10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் எப்போது என்பது குறித்த அறிவிப்பினை CBSE ஆணையம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது.

பொதுத்தேர்வு:

நடப்பு ஆண்டுக்கான(2022-2023) CBSE பொதுத்தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துவந்த நிலையில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு ஒன்றை CBSE ஆணையம் ஆனது அதன் அதிகாரபூர்வ தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் 10ம் வகுப்புக்கான தேர்வானது பிப்ரவரி 15ஆம் தேதி முதல் மார்ச் 21ம் தேதி வரையிலும், 12 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தேர்வானது காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளானது மே மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே செய்முறைத் தேர்வு (practical exams) ஆனது ஜனவரி 2ம் தேதிக்குள் தொடங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்முறைத் தேர்வுகள், தேர்வு மதிப்பீடுகள் மற்றும் அக மதிப்பீடுகளை பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. குறைக்கப்பட்ட பணியிடங்கள் – முடிவுகள் வெளியாவதும் தாமதம்!

Download ExamsDaily Mobile App

செய்முறைத் தேர்வில் கலந்துகொள்ளாத மாணவர்களுக்கு Absent வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தவிர்க்கமுடியாத காரணத்தினால் தேர்வில் கலந்துகொள்ள முடியாத மாணவர்களுக்கு Re-scheduled என குறிப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்பை பள்ளிகளுக்கு CBSE ஆணையம் வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Download CBSE 10&12th Revised Date Sheet

New Offer on RRB Online Courses

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!