ரூ.81,100/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் || முழு விவரங்களுடன்!

0
ரூ.81,100/- ஊதியத்தில் மத்திய அரசு வேலை – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் || முழு விவரங்களுடன்!

Central Board of Indirect Taxes and Customs எனப்படும் CBIC ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Tax Assistant மற்றும் Havaldar பணிக்கான 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் CBIC
பணியின் பெயர் Tax Assistant
பணியிடங்கள் 2
விண்ணப்பிக்க கடைசி தேதி 19.06.2023
விண்ணப்பிக்கும் முறை OFFLINE
CBIC காலிப்பணியிடங்கள்:

Tax Assistant மற்றும் Havaldar பணிக்கான 2 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tax Assistant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CBIC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 27 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tax Assistant ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,000/- முதல் ரூ.81,100/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

CBIC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

தமிழில்‌ எழுத, படிக்க தெரிந்தால் போதும்…! இந்து சமய அறநிலை துறையில் வேலை ரெடி!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 19.06.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF 

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!