தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஹேப்பி நியூஸ் – ரொக்க பரிசு காத்திருக்கிறது!

0
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஹேப்பி நியூஸ் - ரொக்க பரிசு காத்திருக்கிறது!
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஹேப்பி நியூஸ் - ரொக்க பரிசு காத்திருக்கிறது!
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கான ஹேப்பி நியூஸ் – ரொக்க பரிசு காத்திருக்கிறது!

கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தமிழக அரசின் சார்பாக ரேஷன் கடை ஊழியர்களின் செயல் திறனைப் பாராட்டி ரொக்கப் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்குவது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

ரொக்க பரிசு

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக அரிசி, பருப்பு முதலான அனைத்து ரேஷன் கடை பொருட்களும் பொதுமக்களுக்கு மலிவான விலையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்துவதில் நியாய விலை கடை ஊழியர்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அதாவது அனைத்து பொது மக்களுக்கும் ஒரே மாதிரியாக பொருட்களை வினியோகம் செய்வது என அனைத்து தொடர்பான பணிகளையும் ரேஷன் கடை ஊழியர்கள் முறையாக கவனித்துக் கொள்கின்றனர்.

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் வாய்ப்பு – வாட்ஸ் ஆப் மூலம் வங்கிசேவை!

இதனால், இந்த ரேஷன் கடை ஊழியர்களின் சிறப்பான பங்கை பாராட்டி ஒவ்வொரு ஆண்டும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கலாம் என கடந்த சட்டப்பேரவை கூட்டத்தின்போது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,சட்டப்பேரவைக் கூட்டத்தில் அறிவித்தது போன்று தற்போது ரேஷன் கடை ஊழியர்களுக்கு சிறப்பு பரிசு வழங்குவது தொடர்பான அறிவிப்பை உணவு மற்றும் உணவுத்துறை வழங்கல் துறை அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

அதாவது ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசின் சார்பில் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்குவதன் மூலமாக ஊழியர்களின் செயல் திறனை மேம்படுத்தலாம் மற்றும் ஊழியர்களின் பங்களிப்பு மேம்படும் எனவும் கருதப்படுகிறது. இந்நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு அவர்களின் செயல்திறனை பாராட்டி மாவட்ட மற்றும் மாநில அளவில் பரிசு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here