HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி!

0
HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி!
HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி!
HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி!

இப்போது வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் Cardless cash withdrawal என்ற கார்டுகள் இல்லாமல் பணம் எடுக்கும் சேவைகள் HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பரிமாற்ற சேவைகள்

டிஜிட்டல் தொலில்நுட்ப சேவைகள் மூலம் தற்போது பல வகையான செயல்பாடுகள் ஆன்லைன் மூலமே எளிதாகி விட்டது. இந்த தொழில் நுட்பமானது வங்கி துறையிலும் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது. அதாவது முன்பெல்லாம் வங்கி வாடிக்கையாளர்கள் பணம் அனுப்புவது, எடுப்பது, பரிமாற்றம் செய்வது, புதிய கணக்குகள் திறப்பது போன்ற சேவைகளை வங்கிகளுக்கு சென்று தான் மேற்கொள்ள முடியும். பின்னர் இவ்வகை சேவைகள் ATM இயந்திரங்களில் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அனைவரது கைகளில் இருக்கும் இணைய சேவைகள் மூலமே பரிமாற்றம் என்பது மிகவும் லேசாகி விட்டது.

கலப்பட டீசல் விற்றால் குண்டர் சட்டம் பாயும் – தமிழக அரசு அதிரடி!

இதற்கும் சற்று அட்வான்ஸாக டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவைகள் இல்லாமலும் வங்கிகளில் பணம் எடுத்துக்கொள்ளும் செயல்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது Cardless cash withdrawal என்கிற இந்த புதிய வசதி கிட்டத்தட்ட அனைத்து வங்கி வாடிக்கையாளர்களின் பயன்பாட்டுக்கும் வந்துள்ளது. அதன் கீழ் இனி HDFC வாடிக்கையாளர்களும் இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

இந்த பயன்பாடுகள் மூலம் பயனர் ஒருவர் தினசரி ரூ.100 ரூபாய் முதல் ரூ.10,000 வரை எடுத்துக்கொள்ளலாம். மேலும் மாதந்தோறும் ரூ. 25,000 ரூபாய் வரை எடுத்துக்கொள்ள முடியும். இதற்காக வாடிக்கையாளர்கள் முதலில்,

  • HDFC வங்கியின் நெட் பேங்கிங்கை லாகின் செய்ய வேண்டும்.
  • இப்போது fund transfer என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
  • பிறகு cardless cash withdrawal என்பதை கிளிக் செய்யவும்.
  • அதில் வங்கி கணக்கை தேர்வு செய்யவும்.
  • பின்னர் பணத்தை அனுப்பும் நபரை தேர்வு செய்யவும்.
  • அடுத்து தொகையை உள்ளிடவும்.
  • பின்பு பணம் அனுப்புபவர்களுக்கு SMS அனுப்பப்படும்.
  • இப்போது நீங்கள் அருகில் இருக்கும் ATM மூலம் பணம் எடுத்துக்கொள்ள முடியும்.
  • இந்த சேவைகளை ஒரு முறை நிறைவேற்றியவுடன் 24 மணி நேரத்திற்கு மட்டுமே
  • அந்த பரிமாற்றம் செயல்பாட்டில் இருக்கும்.
இந்த பணத்தை எடுக்க,
  • மொபைல் எண்ணுக்கு வரும் OTP எண்ணை ATM இயந்திரங்களில் உள்ளிடவும்.
  • பின்னர் 9 இலக்க ID யை உள்ளிடவும்.
  • அதில் cardless cash ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
  • இப்போது பணம் உங்கள் கைக்கு கிடைக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!