தமிழகத்தில் OLA ஆட்டோ, கார் சேவைக்கான கட்டணம் அதிரடி உயர்வு – அவதியில் பயணிகள்!

0
தமிழகத்தில் OLA ஆட்டோ, கார் சேவைக்கான கட்டணம் அதிரடி உயர்வு - அவதியில் பயணிகள்!
தமிழகத்தில் OLA ஆட்டோ, கார் சேவைக்கான கட்டணம் அதிரடி உயர்வு - அவதியில் பயணிகள்!
தமிழகத்தில் OLA ஆட்டோ, கார் சேவைக்கான கட்டணம் அதிரடி உயர்வு – அவதியில் பயணிகள்!

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட கச்சா எண்ணெய் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது OLA ஆட்டோ, கார் உள்ளிட்டவையின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலும் கூடுதல் தகவல்களை பார்ப்போம்.

கட்டணம் அதிரடி உயர்வு

தமிழகத்தில் ஆட்டோ, கார் உள்ளிட்டவற்றிற்கான கட்டணம் குறைந்தபட்சமாக ரூ. 100 முதல் ரூ.150 வரை மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் OLA, Uber போன்ற நிறுவனங்கள் வந்த பிறகு, குறைந்தபட்ச ஆட்டோ கட்டணமாக ரூ.29 ரூபாய் என நிர்ணயிக்கபட்டது. அதன்பின்பு ரூ.55 ஆக உயர்த்தப்பட்டு வசூலிக்கப்பட்டது. அத்துடன் இதில் நீங்கள் பயணம் செய்யும் தூரத்திற்கு தகுந்தவாறு கட்டணம் செலுத்தினால் போதுமானது. மேலும் சாதாரண ஆட்டோக்களை விட OLA, Uber போன்ற ஆட்டோ டேக்சி சேவையில் குறைவான கட்டணம் வசூலிக்கப்பட்டதால் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்ப்பை பெற்றது.

அத்துடன் இந்த சேவையை வீட்டில் உட்கார்ந்தபடியே பெற முடியும் என்பதால் பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதன் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட கச்சா எண்ணெய்களின் விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாக OLA, Uber போன்ற டாக்கி, ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களின் வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்து வந்தனர்.

Exams Daily Mobile App Download

மத்திய அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால போனஸ் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

அதன்படி தற்போது OLA டாக்கி, ஆட்டோ ஓட்டுநர்களின் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.110 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.110 முதல் ரூ.135 வரை உயர்த்தி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் வசதி கட்டணமாக 5 கி.மீ. தூரத்திற்கு ரூ.35 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து Peek Hour-ல் இந்த கட்டணத்தை இரு மடங்காக வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அத்துடன் திடீரென OLA ஆட்டோ, கார் சேவைக்கான கட்டணம் உயர்ந்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!