பீஸ்ட் பட வெளியீட்டை முன்னிட்டு குழுவினர்களுடன் ட்ரிப் சென்ற விஜய் – குஷியில் ரசிகர்கள்!

0
பீஸ்ட் பட வெளியீட்டை முன்னிட்டு குழுவினர்களுடன் ட்ரிப் சென்ற விஜய் - குஷியில் ரசிகர்கள்!
பீஸ்ட் பட வெளியீட்டை முன்னிட்டு குழுவினர்களுடன் ட்ரிப் சென்ற விஜய் - குஷியில் ரசிகர்கள்!
பீஸ்ட் பட வெளியீட்டை முன்னிட்டு குழுவினர்களுடன் ட்ரிப் சென்ற விஜய் – குஷியில் ரசிகர்கள்!

பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நெல்சன், பூஜா ஹெக்டே உட்பட குழுவினரை விஜய் தன் காரில் ஒரு ட்ரிப் அழைத்து சென்ற வீடியோ நேற்று ஒளிபரப்பான சன் டிவி பேட்டியில் காட்டப்பட்டதை தொடர்ந்து இன்று அபர்ணா தாஸ் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

பீஸ்ட் :

தளபதி படம் என்றாலே பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ தான். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குனருமான நெல்சன் இயக்கத்தில் தயாராகி வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவிருக்கும் தளபதியின் 65 வது ” பீஸ்ட்” படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்புகளையும், பல எதிர்பார்புகளையும் ஏற்படுத்தி, தீவிர காத்திருப்பையும் உண்டாகியுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு – முழு விவரம் இதோ!

இதக்கிடையில் ஒவ்வொரு ஆண்டும் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னர் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறும். ஆனால் இந்த முறை இந்நிகழ்ச்சி நடைபெறாத காரணத்தால் தளபதியின் மேடைப் பேச்சை ரசிகர்கள் மிஸ் பண்ணுவதாக சோகத்தை தெரிவித்த காரணத்தால் ரசிகர்களுக்காக பீஸ்ட் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ஏப்ரல் 10 ஆம் தேதியான நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று சன் தொலைக்காட்சியில் நெல்சன் உடன் விஜய் உரையாடும் நிகழ்வை ஒளிபரப்பினார்கள்.

அந்நிகழ்வில் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் காரில் படக்குழுவினர்கள் விளையாட்டாக ‘எங்களை காரில் அழைத்து சென்றால் தான் ஷூட்டிங் நடக்கும்’ என கூறியதற்கு விஜய்யும் எதுவும் சொல்லாமல் அவர்களை காரில் ஏற்றிக்கொண்டு தானே கார் ஓட்டிய ஒரு விடியோவை ஷேர் செய்திருந்தார்கள். இந்நிலையில் நேற்று சன் டிவியில் வெளிவராத வீடியோ ஒன்று தற்போது அபர்ணா தாஸ் வெளியிட்டு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் விஜய் அவர்களே கார் ஓட்டுகிறார், அவர் காரில் நெல்சன், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் ஆகியோர் குதூகலமாக மகிழ்வது போல் இருந்த அந்த வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோ அபர்ணா தாஸ் அவர்களின் பிறந்தாள் அன்று எடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!