வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடங்களில் கார் லோன் – HDFC வங்கியின் அதிரடி அறிவிப்பு!

0
வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடங்களில் கார் லோன் - HDFC வங்கியின் அதிரடி அறிவிப்பு!
வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடங்களில் கார் லோன் - HDFC வங்கியின் அதிரடி அறிவிப்பு!
வாடிக்கையாளர்களுக்கு 30 நிமிடங்களில் கார் லோன் – HDFC வங்கியின் அதிரடி அறிவிப்பு!

HDFC வங்கி, வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் 30 நிமிட கால அளவில் வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் வழியாக கார் லோன் வழங்கும் திட்டத்தை ஹெச்டிஎப்சி வங்கி அறிமுகம் செய்து உள்ளதாக தெரிவித்து உள்ளது. இந்த திட்டத்திற்கு Xpress Car Loans என்று HDFC வங்கி பெயரிட்டுள்ளது.

அதிரடி அறிவிப்பு:

கடந்த 2 மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ள காரணத்தால் கார் விற்பனையில் அதிகப்படியான தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தி செலவுகளை அதிகரித்த காரணத்தால் அடுத்தடுத்து விலையையும் உயர்த்தி வருகிறது. நாட்டின் முன்னணி தனியார் வங்கியான HDFC வங்கி முக்கியமான ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி அண்மையில் ஹெச்டிஎப்சி வங்கி மீதான கட்டுப்பாடுகளை நீக்கியது. இந்நிலையில் முக்கியமான கடன் வர்த்தகத்திலும், பல்வேறு டிஜிட்டல் சேவை திட்டங்களில் அதிகப்படியான கவனத்தை ஈர்த்து வருகிறது.

TCS நிறுவனத்தில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – தகுதி, விண்ணப்ப செயல்முறைகள் விளக்கம்!

மேலும் ஹெச்டிஎப்சி வங்கி கார் விற்பனையை அதிகரிக்கும் வகையிலும், கார் கடன் வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யும் திட்டத்துடன் ஹெச்டிஎப்சி வெறும் 30 நிமிடத்தில் கார் கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. தற்போது இந்திய வங்கிகளில் கார் கடன் வாங்க வேண்டும் என்றால் ஒரு வாடிக்கையாளர் விண்ணப்பம் சமர்ப்பித்த 48 முதல் 72 மணி நேரத்தில் தான் கிடைக்கும். இந்த நிலையில், தற்போது ஹெச்டிஎப்சி வங்கி வெறும் 30 நிமிடத்தில் கார் லோன் கொடுப்பது என்பது மிகவும் முக்கியமான விஷயமாக பார்க்கப்படுகிறது. இதையடுத்து தனிநபர் பிரிவில் வீட்டுக் கடனுக்கு அடுத்தபடியாக வங்கிகளுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய கடன் வர்த்தகம் என்றால் அது கார் லோன் தான்.

அந்த வகையில் 2023 ஆம் நிதியாண்டில் இந்த 30 நிமிட கார் லோன் திட்ட உதவியுடன் HDFC வங்கி சுமார் 10000 முதல் 15000 கோடி ரூபாய் அளவிலான கடனை கார் லோன் பிரிவில் அளிக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. ஹெச்டிஎப்சி வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு 7.95 முதல் 8.30 சதவீதம் வரையிலான வட்டியில் கார் லோன் அளிக்கிறது. மேலும் கார் வாங்க விரும்பும் 90% வாடிக்கையாளர்கள் அது குறித்த தகவல்களை ஆன்லைன் மூலமாக தேட தொடங்குகின்றனர். ஆனால், இறுதியாக அவர்களில் 2% வாடிக்கையாளர்கள் மட்டுமே டிஜிட்டல் முறையில் டீலர்களை அணுகுகின்றனர்.

Exams Daily Mobile App Download

இதுகுறித்து ஹெச்டிஎஃப்சி வங்கியின் இந்தியப் பிரிவு தலைவர் அரவிந்த் கபில் கூறியது “இப்புதிய திட்டத்தை Xpress Car Loans என்ற பெயரில் தனது ஆன்லைன் தளத்தின் வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு இந்தியாவிலேயே முதல் முறையாக 30 நிமிடத்தில் கார் கடன் அளிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்து உள்ளதாகவும், கார் வாங்குபவர்களில் சுமார் 55 சதவீத வாடிக்கையாளர்கள், நேரடி தொடர்பு பரிவர்த்தனை முறையை தவிர்க்க விரும்புகின்றனர்” என்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!