சின்னத்திரை நட்சத்திர ஜோடி சஞ்சீவ் ஆலியா மானசாவின் கார் கலெக்சன்ஸ் – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
சின்னத்திரை நட்சத்திர ஜோடி சஞ்சீவ் ஆலியா மானசாவின் கார் கலெக்சன்ஸ் - ரசிகர்கள் அதிர்ச்சி!
சின்னத்திரை நட்சத்திர ஜோடி சஞ்சீவ் ஆலியா மானசாவின் கார் கலெக்சன்ஸ் - ரசிகர்கள் அதிர்ச்சி!
சின்னத்திரை நட்சத்திர ஜோடி சஞ்சீவ் ஆலியா மானசாவின் கார் கலெக்சன்ஸ் – ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழ் சின்னத்திரையில் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ள ஜோடியாக சஞ்சீவ் ஆலியா இருக்கின்றனர். இந்நிலையில் அவரது வீட்டில் விசேஷம் என்றால் கார் வாங்குவது வழக்கமாக வைத்திருக்கும் நிலையில் அவர்களது கார் கலெக்சன் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

ஆலியா மானசா சஞ்சீவ் தம்பதி:

விஜய் டிவியில் வெற்றி கண்ட சீரியலான ராஜா ராணியில் செம்பா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஆலியா மானசா. அவர் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் முதலில் ஐலா என்ற மகள் இருக்கிறாள். இந்நிலையில் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்த ஆலியாவிற்கு சில நாட்களுக்கு முன் மகன் பிறந்திருக்கிறான். ஆலியா ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் தற்போது சீரியலில் இருந்து விலகி இருக்கிறார்.

சென்னை: அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் உற்சாகம்!

மேலும் சஞ்சீவ் சன் டிவியில் முன்னணி சீரியலான கயல் சீரியலில் நடித்து வருகிறார். சஞ்சீவ் தனது மகள் பிறப்பதற்கு முன்னதாக பென்ஸ் கார் ஒன்றை பரிசளித்தார். அதன்பிறகு அய்லாவின் முதல் பிறந்தநாளுக்கு சில நாட்கள் இருக்கும் போது, விஜய் டிவியின் நிகழ்ச்சி ஒன்றில் ஆல்யாவுக்கு மினி கூப்பர் கார் ஒன்றை பரிசாக மேடையிலேயே வழங்கினார். இந்நிலையில் தன்னுடைய மகன் பிறந்த சந்தோஷத்தில் மீண்டும் பென்ஸ் கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னதாக அவர் கியா கார்னிவல் கார் ஒன்றையும் வாங்கி இருக்கிறார். இப்படி வீட்டில் நடக்கும் சந்தோசமான நிகழ்ச்சிகளுக்கு கார்களை வாங்கி பரிசளிக்கும் சஞ்சீவின் கார் கலெக்சன் பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். மேலும் அது பற்றி தான் சமூக வலைத்தளங்களில் பேச்சு வார்த்தை இருக்கிறது. மேலும் இந்த அழகான குடும்பம் மென்மேலும் வளர வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!