குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த கேப்டன் வருண் சிங் மறைவு!

0
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த கேப்டன் வருண் சிங் மறைவு!
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த கேப்டன் வருண் சிங் மறைவு!
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் பிழைத்த கேப்டன் வருண் சிங் மறைவு!

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி உள்ளிட்ட 13 மரணமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங் இன்று (டிச.15) காலமாகி இருக்கிறார்.

மறைந்த கேப்டன்

தமிழகத்தில் கடந்த டிச.8ம் தேதியன்று நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பிரதேசத்தில் ஒரு கோர சம்பவம் நடந்தேறியது. அதாவது, இந்திய இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மதுலிக்கா ராவத் உட்பட 14 பேர் பயணம் செய்த உயர்ரக ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட இந்த விபத்தில் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உட்பட அவருடன் பயணித்த 13 பேரும் மரணமடைந்தனர்.

தமிழக கூட்டுறவு வங்கியில் சிறப்பு கடன் முகாம் – பொதுமக்கள் கவனத்திற்கு!!

இந்த செய்தியானது முழு இந்தியாவையே சற்று உலுக்கி போட்டது. அந்த வகையில் அதி நவீன வசதி கொண்ட இந்த ஹெலிகாப்டர், விபத்துக்குள்ளானது எப்படி என்றதொரு கேள்வி இதுவரை விலகாத மர்மமாகவே இருந்து வருகிறது. இதற்கிடையில் விபத்தில் மரணமடைந்த அந்த 13 பேரது உடல்களும் டெல்லிக்கு கொண்டுவரப்பட்டு, கடந்த 9ம் தேதியன்று ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மேலும் விபத்து தொடர்பாக மத்திய அரசு விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.

6ம் முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறப்பு? பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!!

இதற்கிடையில் ஹெலிகாப்டர் விபத்தில் இருந்து பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட குரூப் கேப்டன் வருண் சிங், முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.15) காலமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங் ஒரேயொரு நம்பிக்கையாக கருதப்பட்ட நிலையில் இவரது திடீர் மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!