மத்திய அரசின் PM கிசான் திட்டத்தின் ரூ.2000 நிதிப்பணம் கிடைக்கவில்லையா? இதை செய்யுங்கள்!

0
மத்திய அரசின் PM கிசான் திட்டத்தின் ரூ.2000 நிதிப்பணம் கிடைக்கவில்லையா? இதை செய்யுங்கள்!
மத்திய அரசின் PM கிசான் திட்டத்தின் ரூ.2000 நிதிப்பணம் கிடைக்கவில்லையா? இதை செய்யுங்கள்!
மத்திய அரசின் PM கிசான் திட்டத்தின் ரூ.2000 நிதிப்பணம் கிடைக்கவில்லையா? இதை செய்யுங்கள்!

கடந்த மே 30ம் தேதியன்று வெளியிடப்பட்ட PM கிசான் திட்டத்தின் ரூ.2000 தவணைப்பணம் இன்னும் பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்றால் இது குறித்து புகார்களை தெரிவிக்கலாம்.

PM கிசான் திட்டம்

சுமார் 10 கோடி விவசாய பயனாளி குடும்பங்களுக்கு பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 11வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி மே மாத இறுதியில் வெளியிட்டார். அன்றைய தினம் 10 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு 21,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அந்த வகையில் PM கிசான் திட்டத்தின் 11வது தவணை வெளியான பிறகும் சில விவசாயிகள் இந்த பணம் கிடைக்கவில்லை என்று புகார் அளித்து வருகின்றனர். இப்போது பணம் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படாததற்கு பல காரணங்கள் இருக்கலாம். இதற்கிடையில் PM கிசானின் 11வது தவணைப்பணம் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, தகுதியான விவசாயிகளுக்கு eKYCஐ புதுப்பிப்பதற்கான காலக்கெடுவையும் அரசாங்கம் நீட்டித்தது.

Exams Daily Mobile App Download

அந்த வகையில் அனைத்து PM KISAN பயனாளிகளுக்கான eKYC காலக்கெடு 31 ஜூலை 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தவிர நிதிப்பணம் கிடைக்காததற்கு முக்கிய காரணங்களில் ஒன்று ஆவணம் பொருந்தாதது தான். உதாரணமாக PM கிசான் படிவத்தில் உள்ள உங்களது பெயர் ஆதார் பெயருடன் பொருந்தவில்லை என்றால் PM கிசான் பலன்களைப் பெற முடியாது. அந்த வகையில் உங்கள் முகவரி எப்போதும் உங்கள் ஆதாரில் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை கவனிக்க வேண்டும். இவை அனைத்தையும் தவிர, PM கிசான் 11வது தவணையை பெறாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க நீங்கள் தகுதி இல்லாதவர்களாக இருக்கலாம்.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியோர் கவனத்திற்கு – மறுமதிப்பீடுக்கு விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!

நீங்கள் ஏற்கனவே eKYC செயல்முறையை செய்திருந்தால், உங்கள் பெயர் பயனாளிகளின் பட்டியலில் இருக்கும். மேலும் உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரும் இன்னும் பணம் வரவில்லை என்றால் நீங்கள் PM Kisan ஹெல்ப்டெஸ்கில் புகாரைப் பதிவு செய்யலாம். இந்த புகார்களை வார நாட்களில் அதாவது திங்கள் மற்றும் வெள்ளிக்கு இடைப்பட்ட நாட்களில் பதிவு செய்யலாம். இது தவிர கிசான் திட்டம் தொடர்பான சிக்கலைப் பதிவு செய்ய [email protected] என்ற மின்னஞ்சல் மற்றும் 011-24300606 என்ற ஹெல்ப்லைன் எண்ணையும் பயன்படுத்தலாம். மேலும் இது குறித்த சந்தேகங்கள் இருந்தால் உழவர் நலப் பிரிவும் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!