தமிழக அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவுகள் ரத்து – வலுக்கும் கோரிக்கை!

0
தமிழக அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவுகள் ரத்து - வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவுகள் ரத்து - வலுக்கும் கோரிக்கை!
தமிழக அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவுகள் ரத்து – வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் ஆசிரியர் பணியிடத்தில் ஏராளமான காலிப்பணியிடங்கள் இருப்பதால் தொழிற்கல்வி பாடபிரிவுகள் ரத்து செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதனால் இது தொடர்பாக பன்னீர் செல்வம் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தொழிற்கல்வி

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். இதனால் ஏராளமான பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக தொழிற்கல்வி பாடங்கள் ரத்து செய்யப்படுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இது தொடர்பாக பன்னீர் செல்வம் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப் பிரிவுகளை ரத்து செய்ய பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

தமிழக 10,12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் கவனத்திற்கு – ஆட்சியர் வெளியிட்ட முக்கிய தகவல்!

இதற்கு முக்கிய காரணமாக இருப்பது ஆசிரியர் பணியிடங்களில் இருக்கும் காலிப்பணியிடங்கள் தான். ஆனால் இது தொடர்பான செய்திகள் வெளியானதை தொடர்ந்து இது தொடர்பாக உரிய விவரங்களை அளிக்கும்படி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கேட்டுக்கொண்டார். இதனால் பள்ளிக்கல்வித்துறைக்கு தெரியாமல் அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடங்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது என்பதை உறுதி செய்ய முடிகிறது. அத்துடன் தொழிற்கல்விப்பாடங்களை ரத்து செய்வது மாணவர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் இவர் தெரிவித்துள்ளதாவது, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் தொழிற்கல்விப்பாடங்களை ரத்து செய்வது நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு ஆபத்தானது என்பதோடு மட்டுமல்லாமல், பொருளாதாரம் பாதிப்படையவும், வேலை வாய்ப்புகள் இருந்தும் மாணவர்களால் பெற முடியாத சூழல் ஏற்படும். அதனால் மாணவர்களின் நலன் கருதி அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடங்களை ரத்து செய்யும் முடிவை தமிழக முதல்வர் இதில் தனிக்கவனம் மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதற்கான முடிவை விரைவில் அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!