கனரா வங்கி 2500 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் !

0
கனரா வங்கி 2500 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் !
கனரா வங்கி 2500 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் !
கனரா வங்கி 2500 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் !

IBPS என்னும் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனத்திலிருந்து சமீபத்தில் வெளியான அறிவிப்பில் கனரா வங்கியில் காலியாக உள்ள Probationary Officer பணிக்கு என மொத்தமாக 2500 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான முழுமையான விவரங்களும் கீழே எளிமையான முறையில் தரப்பட்டுள்ளது.

கனரா வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:

ஆண்டு தோறும் IBPS நடத்தும் வங்கி தேர்வுகள் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளிலும் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இதனை தொடர்ந்து இந்த ஆண்டும் இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளில் காலியாக உள்ள  6000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் கனரா வங்கியில் காலியாக உள்ள Probationary Officer பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 2500 பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வங்கி பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி அல்லது கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு Degree பெற்றவர்கள் மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு சமமான தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download

Probationary Officer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யும் நாளில் பட்டதாரி என்பதற்கான செல்லுபடியாகும் மதிப்பெண் சான்றிதழ் / பட்டப்படிப்பு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மேலும் ஆன்லைனில் பதிவு செய்யும் போது பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் சதவீதத்தையும் குறிப்பிட வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்களின் வயது வரம்பு 01.08.2022 அன்றைய நாளின் படி, குறைந்தபட்சம் 20 வயது எனவும், அதிகபட்சம் 30 வயது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வயது தளர்வு பற்றிய தகவலை அறிவிப்பில் காணலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்து தேர்வானது Preliminary Examination, Main Examination என இரு பிரிவாக நடைபெறும். எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

சிறந்த coaching centre – Join Now

இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் SC / ST / PWBD பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களிடம் ரூ.175/- விண்ணப்ப கட்டணமாகவும், மற்ற நபர்களிடம் ரூ.850 /- விண்ணப்ப கட்டணமாகவும் வசூலிக்கப்படும். மேலும் விண்ணப்பதாரர்கள் இந்த விண்ணப்பக் கட்டணத்தை Online மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் ibpsonline.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால நீட்டிப்பு நாளையுடன் (22.08.2022) முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Exams Daily Mobile App Download

Online Application Link 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here