கனரா வங்கி வாடிக்கையார்களுக்கு அதிரடி சலுகை – மூன்று புதிய திட்டங்கள் அறிவிப்பு!!

2
கனரா வங்கி வாடிக்கையார்களுக்கு அதிரடி சலுகை - மூன்று புதிய திட்டங்கள் அறிவிப்பு!!
கனரா வங்கி வாடிக்கையார்களுக்கு அதிரடி சலுகை - மூன்று புதிய திட்டங்கள் அறிவிப்பு!!
கனரா வங்கி வாடிக்கையார்களுக்கு அதிரடி சலுகை – மூன்று புதிய திட்டங்கள் அறிவிப்பு!!

கொரோனா தொற்றினால் நாடு முழுவதும் மக்கள் இக்கட்டான சூழலில் உள்ளதால் வாடிக்கையாளர்களுக்காக கனரா வங்கி நிர்வாகம் மூன்று புதிய கடன் திட்டங்களை அறிவித்துள்ளது.

புதிய திட்டங்கள்:

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையினால் நாடு முழுவதும் பலத்த பொருளாதார சரிவுகள் ஏற்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ஒரு கோடிக்கும் அதிகமானவர்கள் முழு ஊரடங்கினால் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அபாயகரமாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கியான கனரா தனது வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் மூன்று புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நலத்திட்ட அறிக்கைகள் – உச்ச நீதிமன்றம் ஆணை!!

சுகாதாரக் கடன், தொழில் கடன் மற்றும் பர்சனல் லோன் ஆகியவற்றை வழங்க வங்கி முடிவு செய்துள்ளது. கனரா சுரக் ஷா பர்சனல் லோன் திட்டத்தின் படி, ரூ.25,000 முதல் ரூ.5 லட்சம் வரை வழங்க முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்றின் சிகிச்சை போன்ற அவசரகால தேவைகளுக்காக இந்த புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கனரா சுரக் ஷா திட்டம் செப்டம்பர் 30, 2021 வரை செயல்படும்.

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் – 100 வழக்குகள் பதிவு!!

இந்த திட்டத்தின் மூலம் பதிவு செய்யப்பட்ட மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள், மருத்துவ ஊழியர்கள், லேப், சிகிச்சை மையங்கள் உள்ளிட்ட சுகாதார அமைப்புகளுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.50 கோடி வரை கடன் வழங்கப்படும். 10 ஆண்டு காலத்திற்கு வழங்கப்படும் இந்த கடன்களுக்கு வட்டி சலுகையும், 18 மாதங்களுக்கு மொராடோரியமும் வழங்கப்படும் என கனரா வங்கி அறிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

கனரா சிகித்ஸா திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் மார்ச் 21 2022 வரை ஆகும். கனரா ஜீவன் ரேகா திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள், ஆக்சிஜன் சிலிண்டர், ஆக்சிஜன் கான்சண்ட்ரேட்டர் உள்ளிட்ட மருத்துவ கருவிகளை உற்பத்தி செய்ய மருத்துவமனைகள், உற்பத்தி நிறுவனங்களுக்கு ரூ.2 கோடி வரை கடன் வழங்கப்படும். இதற்கு வட்டி சலுகையும் உண்டு. இந்த கடன்களுக்கு பிராசஸிங் கட்டணம் வசூலிக்கப்படாது என கனரா வங்கி தெரிவித்துள்ளது. இந்த திட்டங்களின் கீழ் கடன் பெறுவதற்கு சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களிடம் Collateral Security அவசியமில்லை என்றும் வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!