18 வயது நிரம்பாத குழந்தைகளுக்கு வங்கி கணக்கு ஓபன் செய்ய முடியுமா? முழு விபரம் இதோ!

0
18 வயது நிரம்பாத குழந்தைகளுக்கு வங்கி கணக்கு ஓபன் செய்ய முடியுமா? முழு விபரம் இதோ!
18 வயது நிரம்பாத குழந்தைகளுக்கு வங்கி கணக்கு ஓபன் செய்ய முடியுமா? முழு விபரம் இதோ!
18 வயது நிரம்பாத குழந்தைகளுக்கு வங்கி கணக்கு ஓபன் செய்ய முடியுமா? முழு விபரம் இதோ!

இன்றைய காலகட்டத்தில் பிள்ளைகளுக்கு, பெற்றோர்கள் கொடுக்கும் பாக்கெட் மணி எவ்வளவு தான் கொடுத்தாலும், அந்தத் தொகை போதுமானதாக இல்லை என்று சில பிள்ளைகள் சொல்கின்றனர். இந்த நிலையில் அவர்கள் பணத்தின் அருமையை புரிந்து கொள்ள வேண்டும், அதற்கு உதவியாக 18 வயதுக்கும் குறைவான பிள்ளைகளுக்கு ‘மாணவர் கணக்கு’ என்ற பெயரில் சேமிப்புக் கணக்கு தொடங்குவதற்கு வங்கிகள் அனுமதிக்கின்றன. இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

என்னென்ன வசதிகள் கிடைக்கும்:

பெற்றோர்கள், தம் பிள்ளைகளுக்கு நாள்தோறும் பள்ளிக்கு செல்லும்போதோ அல்லது கல்லூரிக்கு செல்லும்போதோ பாக்கெட் மணியாக குறிப்பிட்ட தொகையை வழங்குவார்கள். இது அனைவரது வீட்டில் வழக்கமாக நடைபெறுவது தான். இந்த பாக்கெட் மணி தொகையை அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் உள்ள கேண்டீன்களில் டீ, காபி, கூல்டிரிங்க்ஸ் அருந்துவது அல்லது வார இறுதியில் நண்பர்களுடன் சேர்ந்து வெளியில் செல்வது போன்ற செலவினங்களுக்கு அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, பெற்றோர் கொடுத்த பணத்தில் ஒரு பாதியை மட்டும் செலவு செய்து விட்டு, மீதமுள்ள பணத்தை சிறுக, சிறுக சேமித்து பெரும் தொகையாக மாற்றும் பிள்ளைகளும் உள்ளனர்.

Exams Daily Mobile App Download

இத்தகைய சூழலில், வளர் இளம் பருவ வயதினருக்கு வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குவது அவசியமாகிறது. தத்தமது வரவு, செலவுகளை அவர்கள் திட்டமிட்டுக் கொள்வதற்கு இந்த சேமிப்பு கணக்கு உதவியாக இருக்கிறது. 18 வயது பூர்த்தி அடைந்த கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு வங்கிக் கணக்கு திறப்பதில் எந்தவித நிபந்தனையும் கிடையாது. தொடர்ந்து பதினெட்டு வயதுக்கும் குறைவானவர்களுக்காக ‘மாணவர் கணக்கு’ வசதியை வங்கிகள் வழங்குகின்றன. இக் கணக்கின் மூலம், மிகக் குறைந்த வயதிலேயே சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள இயலும். ஆனால், இதில் மற்ற வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் அனைத்து சேவை வசதிகளும் கிடைக்காது.

தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்வோருக்கு சூப்பர் அறிவிப்பு – செயலி அறிமுகம்!

இத்தகைய கணக்கு வைத்திருப்பவர்கள் வங்கியில் பணம் செலுத்தலாம் மற்றும் பணம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், மூன்றாம் நபர்களுக்கான பணப் பரிவர்த்தனைகளை செய்ய முடியாது. இருப்பினும், குழந்தையின் பெயரில் வங்கிக் கணக்குத் தொடங்குவதன் மூலம் அவர்களுக்குப் பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்த முடியும். தனக்கு எவ்வளவு பணம் தரப்படுகிறது, அதை நாம் எந்த அளவுக்கு பொறுப்புடன் செலவு செய்திருக்கிறோம், எவ்வளவு தொகையை சேமித்திருக்கிறோம் என்பதை எல்லாம் கற்றுக் கொள்ள இது உதவியாக இருக்கும். இந்த கணக்கை தொடங்க ஆதார் அட்டை உட்பட அரசு வழங்கிய ஏதேனும் ஒரு அடையாள அட்டையைக் குழந்தைக்கும் பெற்றோருக்கும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!