தமிழக முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் – முக்கிய ஆலோசனை!

0
தமிழக முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் - முக்கிய ஆலோசனை!
தமிழக முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் - முக்கிய ஆலோசனை!
தமிழக முதல்வர் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் – முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டம் இன்றுடன் (ஜூன் 24) முடிவடையும் நிலையில், முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அமைச்சரவை கூட்டம்

தமிழகத்தில் கடந்த 21 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வந்த சட்டப்பேரவை கூட்டம், இன்றுடன் (ஜூன் 24) முடிவடைகிறது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தில், பொது மக்களுக்கான பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாக திமுக தலைமையிலான அரசு உறுதியளித்துள்ளது. இதற்கிடையில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று (ஜூன் 24) மாலை நடைபெற உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஆட்சியமைத்ததான முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் கடந்த மே மாதம் 7 ஆம் தேதி அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பல ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு, அந்த பணிகளில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் 2 ஆவது முறையாக அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.

TN Job “FB  Group” Join Now

முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டமானது இன்று (ஜூன் 24) மாலை 6 மணியளவில் துவங்கவுள்ளது. சட்டப்பேரவை கூட்டம் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், இன்று (ஜூன் 24) மாலையே அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளதால், இக்கூட்டத்திற்கு பலத்த எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் சில முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!