தமிழகத்தில் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் – முக்கிய முடிவுகள் வெளியீடு!

0
தமிழகத்தில் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் - முக்கிய முடிவுகள் வெளியீடு!
தமிழகத்தில் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் - முக்கிய முடிவுகள் வெளியீடு!
தமிழகத்தில் முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் – முக்கிய முடிவுகள் வெளியீடு!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. மேலும் இந்த கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள தேவைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சரவை கூட்டம்:

தமிழகத்தில் தற்போதைய அரசு மக்களுக்கு தேவையான பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த அறிவிப்புகளில் பாதி திட்டங்களை செயல்படுத்தி விட்டன. இதையடுத்து மீதி இருக்கும் திட்டங்கள் குறித்து ஆலோசித்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று மாலை அமைச்சரவை கூட்டம் முதல்வர் தலைமையில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மக்களின் தேவைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஆன்லைன் ரம்மி, ஜெயலலிதா மரணம் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் அறிக்கை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலை 6 மணி அளவில் ன் நடைபெற இருக்கும் அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து சென்னையை அடுத்த பரந்தூரில் அமைய உள்ள 2 பசுமை விமான நிலைய விவகாரம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post Officeல் கணக்கு துவங்க நினைப்போர் கவனத்திற்கு – சிறப்பான 3 திட்டம் அறிமுகம்!

ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கை தமிழக அரசிடம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் மக்களை பாதுகாப்பது பற்றியும், வெள்ளத்தடுப்பு, மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை பணிகளை துரிதப்படுத்துவது சம்பந்தமாகவும் ஆலோசிக்கப்பட இருக்கிறது. மேலும் தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்காக அரசிடம் விண்ணப்பித்துள்ள நிறுவனங்களுக்கு அனுமதியும், சலுகையும் வழங்குவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!