CA 2021 தேர்வு விண்ணப்ப திருத்தம் – இன்று கடைசி நாள்!!

0
CA 2021 தேர்வு விண்ணப்ப திருத்தம் - இன்று கடைசி நாள்!!
CA 2021 தேர்வு விண்ணப்ப திருத்தம் - இன்று கடைசி நாள்!!
CA 2021 தேர்வு விண்ணப்ப திருத்தம் – இன்று கடைசி நாள்!!

இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா 2021ம் ஆண்டுக்கான CA தேர்வு விண்ணப்ப திருத்தத்திற்கு இன்று இறுதி நாள் என்று அறிவித்துள்ளது.

பட்டயக் கணக்கறிஞர்:

இந்திய பட்டய கணக்காளர்கள் வாரியம் (ICAI) பட்டயக் கணக்கறிஞர்கள் (CA) தொழிலை வழிநடத்த உருவாக்கப்பட்ட சட்டபூர்வமான ஆணையம் ஆகும். பட்டயக் கணக்காளராக விரும்பும் நபர்கள் ICAI வாரியம் நடத்தும் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து சான்றிதழ் வழங்கப்படும். இவர்கள் மத்திய அரசால் பதிவு செய்யப்பட்ட பட்டயக் கணக்காளராக அறிவிக்கப்படுவார்கள்.

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கில் ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே விளக்கம்!!

நடப்பு ஆண்டு தேர்வு:

வழக்கமாக CA தேர்வுகள் வருடத்திற்கு இரண்டு முறை நடக்கும். 2021ம் ஆண்டுக்கான CA தேர்வுகள் அட்டவணை முன்னதாக வெளியிடப்பட்டு மே மாத தேர்வுக்கான விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டு விட்டது. தற்போது CA தேர்வுக்கான இறுதி நிலை (புதிய பாடத்திட்டம்), ஐபிசிஇ, ஐபிசிஇ (புதிய பாடத்திட்டம்) போன்ற தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை திருத்துவதற்கு ஏப்ரல் 17ம் தேதி முதல் ஏப்ரல் 19ம் தேதியான இன்று நள்ளிரவு 11:59 மணி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

திருத்தம்:

CA 2021 தேர்வின் முதல், இரண்டாம் மற்றும் இறுதி நிலை தேர்வு விண்ணப்பங்களில் தேர்வு மையம், குழு, பாடத்திட்டங்கள், பாடமொழி போன்றவற்றை திருத்திக் கொள்ளலாம். மேலும், 2020 நவம்பர் மாத தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தவர்கள் icaiexam.icai.org என்ற இணையதளத்தில் தங்களின் விண்ணப்பத்தை திருத்தம் செய்து கொள்ளலாம். மேலும், விண்ணப்பங்களை திருத்தம் செய்வதற்கு இன்றே கடைசி நாளாகும். தேர்வுக்கான நுழைவு சீட்டுகள் வழங்கப்பட்ட பின்னர் இந்த தகவல்களை மாற்றியமைக்க முடியாது என்றும் ICAI ஆணையம் அறிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!