பணிநீக்க பட்டியலில் இணைந்த பிரபல நிறுவனம் – 1000 ஊழியர்கள் குறைப்பு!!

0
பணிநீக்க பட்டியலில் இணைந்த பிரபல நிறுவனம் - 1000 ஊழியர்கள்
பணிநீக்க பட்டியலில் இணைந்த பிரபல நிறுவனம் - 1000 ஊழியர்கள்
பணிநீக்க பட்டியலில் இணைந்த பிரபல நிறுவனம் – 1000 ஊழியர்கள் குறைப்பு!!

முன்னணி கல்வி தொழில்நுட்ப (EdEtech) நிறுவனமான பைஜூஸ் கிட்டத்தட்ட 1000 பேரை பணிநீக்கம் செய்ததாக அறிவித்துள்ளது. வருவாய் இழப்பு இதற்கு காரணங்களாக சொல்லப்பட்டுள்ளது.

ஊழியர்கள் குறைப்பு

இந்தியாவில் உள்ள பன்னாட்டு கல்வி தொழில்நுட்ப நிறுவனம் பைஜூஸ். பெங்களூருவை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் சுமார் 115 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களை பயிற்றுவித்து வருகிறது. இந்த நிலையில், செலவின குறைப்பு முயற்சியில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம் சுமார் 1000 முதல் 1,200 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த பணிநீக்கம் பைஜூஸ் நிறுவனத்தின் பொறியியல், விற்பனை, தளவாடங்கள், மார்க்கெட்டிங் மற்றும் தகவல் தொடர்பு துறையின் ஊழியர்களை பாதித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

TNPSC,TNUSRB,TET தேர்வர்கள் கவனத்திற்கு – உங்களுக்கான சிறந்த Tamil Book Material! தவறவிடாதீர்கள்!

இந்த நிறுவனம் நடப்பு நிதியாண்டில் குறைந்த வருவாய் வளர்ச்சியை மட்டும் பெற்றுள்ளதால் 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக, Byju’s நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சுமார் 2,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது. இந்த பணிநீக்கங்களுக்கு செலவினக் குறைப்பு காரணங்களாக சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!