HCL நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் – பென்ஸ் கார் பரிசு!

0
HCL நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் - பென்ஸ் கார் பரிசு!
HCL நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் - பென்ஸ் கார் பரிசு!
HCL நிறுவன ஊழியர்களுக்கு ஜாக்பாட் – பென்ஸ் கார் பரிசு!

இந்தியாவின் பிரபல ஐடி நிறுவனமான HCL தனது ஊழியர்களுக்கு பென்ஸ் காரை பரிசளிக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சிறந்த ஊழியர்களை ஊக்குவித்து, தனது நிறுவனத்திலேயே தக்கவைக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

HCL திட்டம்:

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தொழில்துறைகளும் ஆட்டம் கண்ட நிலையில், ஐடி துறை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது. TCS, Wipro, Infosys மற்றும் HCL உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் வருமானமும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஊரடங்கில் அனைத்து தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மூடப்பட்ட நிலையில் ஐடி துறையினர் வீட்டில் இருந்தே படியே பணியினை தொடர்ந்தனர். தற்போது ஐடி துறையில் இயந்திரங்களின் தலையீட்டால் மனிதர்கள் வேலையிழக்கும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப வளைகாப்பு விழா, விஜய் டிவி நட்சத்திரங்களுடன் – வெளியான ப்ரோமோ!

இருப்பினும் பெரிய நிறுவனங்கள் தங்களின் சிறந்த ஊழியர்களை தக்கவைத்து கொள்வதில் தொடர் கவனம் செலுத்தி வருகின்றன. அதற்காக ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட சலுகைகளை அளித்து வருகின்றன. இதற்கெல்லாம் ஒருபடி மேலே, HCL நிறுவனம் தனது சிறந்த ஊழியர்களுக்கு பென்ஸ் காரை பரிசளிக்க திட்டமிட்டு உள்ளது. டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான ஒரு அறிக்கையின்படி, இது தொடர்பாக ஒரு அறிக்கை நிறுவனத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைத்ததும் செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

TN Job “FB  Group” Join Now

ஏற்கனவே 2013 ஆம் ஆண்டில் நிறுவனம் இதேபோன்ற கருத்தை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது. அதில் 50 மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை சிறந்த ஊழியர்களுக்கு பரிசளித்தது. ஆனால் இந்த நடைமுறை பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில், எச்.சி.எல் டெக்னாலஜிஸ் நடப்பு நிதியாண்டில் 22,000 பேரை புதிதாக வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு 15,600 பேர் பணியமர்த்தப்பட்டனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!