இளைஞர்களின் தொழில் கடன் 41.48 கோடி ரூபாய் தள்ளுபடி – மாநில அரசு அறிவிப்பு!

0
இளைஞர்களின் தொழில் கடன் 41.48 கோடி ரூபாய் தள்ளுபடி - மாநில அரசு அறிவிப்பு!
இளைஞர்களின் தொழில் கடன் 41.48 கோடி ரூபாய் தள்ளுபடி - மாநில அரசு அறிவிப்பு!
இளைஞர்களின் தொழில் கடன் 41.48 கோடி ரூபாய் தள்ளுபடி – மாநில அரசு அறிவிப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த இளைஞர்களின் தொழில் கடனான ரூபாய் 41.48 கோடியை தள்ளுபடி செய்வதாக அம்மாநில காங்கிரஸ் அரசு அறிவித்துள்ளது.

தொழில் கடன் தள்ளுபடி:

இந்தியாவில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மக்களுக்காக மத்திய & அந்தந்த மாநில அரசுகளும் பல்வேறு நல திட்டங்களையும், சலுகைகளையும் செயல்படுத்தி வருகின்றன. தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக கல்வி உதவித்தொகைகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரிகளில் சேர மாநில வாரியாக இடஒதுக்கீடுகள் உள்ளது. சில திட்டங்களில் தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த மாணவர்களின் முழு கல்வி செலவையும் அரசே ஏற்கிறது. மேலும் அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடும் உள்ளது.

தமிழகத்தில் காவலர்களின் வாரிசுகள் 1,132 பேருக்கு அரசு பணி – முதல்வர் சட்டப்பேரவையில் அறிவிப்பு!!

தற்போது பஞ்சாபில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் அம்மாநில அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பஞ்சாபில் 2022ம் ஆண்டு தொடக்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. மீண்டும் ஆட்சி அமைக்கும் நோக்கில் காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது. அதனால் காங்கிரஸ் அரசு மக்களை கவரும் வண்ணம் புதிய நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தாழ்த்தப்பட்ட பிரிவை சேர்ந்த இளைஞர்களின் தொழில் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு? நாளை மறுநாள் அறிக்கை தாக்கல்!

பஞ்சாபில் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த 10,151 இளைஞர்களுக்கு தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டு நிதி நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட ரூபாய் 41.48 கோடி தொழில் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது என்று பஞ்சாப் மாநில சமூக நீதி மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் சாது சிங் தெரிவித்துள்ளார். மேலும் தாழ்த்தப்பட்ட பிரிவினர் வாங்கிய 50,000 ரூபாய் வரையிலான கடன் தொகைகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் வருமானமின்றி தவித்து வரும் நிலையில் அரசின் இந்த நடவடிக்கை தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!