தமிழகத்தில் பேருந்து போக்குவரத்துக்கு ஜூன் 14 வரை தடை நீட்டிப்பு – அரசு உத்தரவு!

0
தமிழகத்தில் பேருந்து போக்குவரத்துக்கு ஜூன் 14 வரை தடை நீட்டிப்பு - அரசு உத்தரவு!
தமிழகத்தில் பேருந்து போக்குவரத்துக்கு ஜூன் 14 வரை தடை நீட்டிப்பு - அரசு உத்தரவு!
தமிழகத்தில் பேருந்து போக்குவரத்துக்கு ஜூன் 14 வரை தடை நீட்டிப்பு – அரசு உத்தரவு!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு உத்தரவில், பேருந்து போக்குவரத்துக்கான தடை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஜூன் 7 ஆம் தேதிக்கு மேல் 1 வாரத்திற்கு முழு ஊரடங்கை நீட்டிப்பதாக அரசு அறிவித்துள்ளது. கடந்த 2 வாரங்களாக தளர்வில்லா முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒரு வார ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அத்தியாவசிய கடைகள் இயக்கத்திற்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

ssc

தவிர அலுவலகங்கள், இறைச்சி கடைகள் உள்ளிட்ட பல சேவைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாதிப்பு விகிதம் அதிகமுள்ள 11 மாவட்டங்களில் மட்டும் தற்போதுள்ள கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு, சில தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பொது முடக்க காலத்தில் போக்குவரத்து சேவைகளுக்கு உண்டான தடைகள் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – CEO வெளியீடு!

அதாவது மே 10 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில், மாவட்டத்திற்கு உள்ளும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும், மாநிலங்களுக்கு இடையான பேருந்து பொது போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து பேருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்ட நிலையில், அவசர காரணங்களுக்காக மட்டும் இ-பதிவுடன் பயணம் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கில் பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கான தடை ஜூன் 14 ஆம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!