தமிழகத்தில் அதிகரிக்கும் பேருந்து கட்டணம்? வலுக்கும் எதிர்ப்பு! பயணிகள் அவதி!

0
தமிழகத்தில் அதிகரிக்கும் பேருந்து கட்டணம்? வலுக்கும் எதிர்ப்பு! பயணிகள் அவதி!
தமிழகத்தில் அதிகரிக்கும் பேருந்து கட்டணம்? வலுக்கும் எதிர்ப்பு! பயணிகள் அவதி!
தமிழகத்தில் அதிகரிக்கும் பேருந்து கட்டணம்? வலுக்கும் எதிர்ப்பு! பயணிகள் அவதி!

தமிழகத்தில் பண்டிகை தினங்களில் ஆம்னி பேருந்துகளில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், இந்த நிலை மாற ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசே வசூலிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆம்னி பேருந்து கட்டணம்:

தமிழகத்தில் பலர் தங்களது சொந்த ஊர்களை விட்டு சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட முக்கியமான பண்டிகை நாட்களில் தங்களுடைய குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கிறது. மேலும் இந்த பண்டிகைகளில் அலுவலகங்களும் 2, 3 நாட்கள் விடுமுறை விடுகின்றன. அதனால் மக்கள் சொந்த கிளம்ப திட்டமிடுகின்றனர்.

அந்த வகையில் ஒரு சிலர் முன் கூட்டியே ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்கின்றனர். ஆனால் ஒரு சில ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதால் ரயில்களில் முன்பதிவு முடிந்து காத்திருப்பு பட்டியலும் அதிகமாகிவிடுகிறது. அதனால் கட்டாயம் சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற நிலைமையால் மக்கள் தனியார் ஆம்னி பேருந்துகளை நாடி செல்கின்றனர். ஆனால் அதையே சாதகமாக பயன்படுத்தி, ஆம்னி பேருந்துகளின் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது.

குழந்தைகளை தாக்கும் இன்புளுயன்சா காய்ச்சல் – பள்ளிகளுக்கு விடுமுறை? வலுக்கும் கோரிக்கை!

Exams Daily Mobile App Download

அதாவது காந்தி ஜெயந்தி (அக்.2-ந்தேதி), ஆயுதபூஜை (அக்.4), விஜயதசமி (அக்.5) என தொடர் அரசு விடுமுறை வருவதால் வருகிற 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று ஆம்னி பேருந்து டிக்கெட் விலை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. மேலும் செப். 30 ஆம் தேதி சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பேருந்திற்கு ரூ. 3,900 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தில் இருக்கின்றனர். அது மட்டுமில்லாமல் ரயில்களில் ‘பிரீமியம் தட்கல்’ என்ற பெயரில் பயணிகளிடம் இருந்து கூடுதல் கட்டணத்தை கறப்பது போன்று ஆம்னி பஸ்களிலும் இருக்கைகளுக்கு ஏற்ப கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதனால் இந்த சிரமத்தை குறைக்க ஆம்னி பேருந்து கட்டணத்தை நிரந்தரமாக அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!