அரசு ஊழியர்களுக்கு அடித்த பம்பர் லாட்டரி? தீபாவளி போனஸ் ரெடி!

0
அரசு ஊழியர்களுக்கு அடித்த பம்பர் லாட்டரி? தீபாவளி போனஸ் ரெடி!
அரசு ஊழியர்களுக்கு அடித்த பம்பர் லாட்டரி? தீபாவளி போனஸ் ரெடி!
அரசு ஊழியர்களுக்கு அடித்த பம்பர் லாட்டரி? தீபாவளி போனஸ் ரெடி!

பொதுவாக அரசின் நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், தற்காலிக ஊழியர்களுக்கு அளிக்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுவதுண்டு. இந்நிலையில், டெல்லி அரசு தற்போது தற்காலிக ஊழியர்களுக்கான சலுகைகளை அறிவித்துள்ளது.

தீபாவளி போனஸ்:

ஒப்பந்ததாரர்கள் போனஸ் வழங்காதது குறித்து அவுட்சோர்சிங் ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட புகார்களைக் கருத்தில் கொண்டு, தற்காலிக தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதை உறுதி செய்யுமாறு அனைத்து துறைகள் மற்றும் நிறுவனங்களுக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர் ஆணையரால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, ஒரு ஆண்டில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை பணியமர்த்திய அனைத்து ஒப்பந்ததாரர் நிறுவனங்களும் போனஸ் கொடுப்பனவுச் சட்டம், 1965-ன் கீழ் செயல்பட வேண்டும்.

டெல்லி அரசு துறைகளில் ஏராளமான ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு தீபாவளி போனஸ் அளிக்கப்படவில்லை என்பதால் புகார்கள் எழுந்து வந்தது. போனஸ் கொடுப்பனவுச் சட்டம், 1965 ஆனது அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் மற்றும் மாநில அரசுகளால் நிறுவப்பட்ட நிறுவனங்களுக்கும் பொருந்தும். போனஸ் சட்டத்தின் பிரிவு 10ன் படி, தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 8.33 சதவீதத்தை குறைந்தபட்ச போனஸாக வழங்குகிறது. ஆனால், போனஸ் சட்டத்தின் பிரிவு 19 இன் படி ஆண்டில் 8 மாதங்கள் முழுமையாக பணியாற்றியவர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் நாளை (செப். 23) இந்த ஏரியாவில் பவர் கட் – மின்சார வாரியம் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இந்நிலையில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதை உறுதி செய்வது முதலாளியின் பொறுப்பு என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையின் போது அவுட்சோர்ஸ் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு போனஸ் அவர்களின் ஒப்பந்ததாரர்களால் வழங்கப்படுவதை உறுதி செய்யுமாறு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!