பட்ஜெட் 2023: வருமான வரி வரம்பு ரூ.6 லட்சமாக உயர்வு? நிதியமைச்சரால் விரைவில் அறிவிப்பு வெளியீடு!
மத்திய அரசு 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு வரம்பு, நிலையான விலக்கு வரம்பு உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருமான வரி
நாட்டில் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் இந்த பட்ஜெட் ஆனது, கொரோனா பரவல், பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவற்றிற்கு மத்தியில் வெளியாக இருப்பதால் இந்த பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகளை சாமானிய மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் இந்த பட்ஜெட்டில், மாத சம்பளம் பெறுபவர்களுக்கு வருமான வரி விலக்கு இருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி வருமான வரி விதிகளின் கீழ், வருமான வரி விலக்கு வரம்பு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்போது ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சம்பளம் பெறுபவர்கள் 5 சதவீதம் வரை வருமான வரி செலுத்தப்பட வேண்டும்.
ஜி 20 மாநாடு: இந்த 5 இடங்களில் மட்டும் 144 தடை உத்தரவு – புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தற்போது இந்த வரம்பு 5 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரம்பு உயர்த்தப்பட்டால் மாத சம்பளதாரர்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் இருக்கும். இதுமட்டுமல்லாமல், நிலையான விலக்கு வரம்பு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று, வட்டிக்கான வரி விலக்கு ரூ.25,000 ஆக உயர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது.