மத்திய பட்ஜெட் 2023 தாக்கல் – LIVE UPDATES!!

0
மத்திய பட்ஜெட் 2023 தாக்கல் - LIVE UPDATES!!
மத்திய பட்ஜெட் 2023 தாக்கல் - LIVE UPDATES!!
மத்திய பட்ஜெட் 2023 தாக்கல் – அதிகரிக்கும் எதிர்பார்ப்பு! LIVE UPDATES!!

2023-24 ஆம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று (பிப். 1) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தாக்கல் செய்யப்படுகிறது. அதில் ஏழை மக்களின் சுமையை குறைக்க எதாவது சலுகை இருக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பட்ஜெட்:

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் நேற்று (ஜன. 31) தொடங்கியது. இந்த கூட்டத்தொடரின் முதல் கட்டத்தை பிப். 13 ஆம் தேதி வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது கட்டம் மார்ச் 13 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. மேலும் 2023-24 ஆம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று (பிப். 1) நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தாக்கல் செய்யப் படுகிறது.

பாஜக அரசின் 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முந்தை பட்ஜெட் இது என்பதால் நாட்டு மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மூன்றாவது முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலமாக தாக்கல் செய்கிறார். ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

LIVE UPDATES…

மதியம் 12.50 மணி: ரூ.12.31 கோடி கடன்!

வரும் நிதியாண்டில் ரூ.12.31 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

மதியம் 12.45 மணி: மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம்!

மகிளா சம்மன் சேமிப்பு பத்திரம்: பெண்களின் பெயரில் 2 ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதற்கு 7% வட்டி வழங்கப்படும்

மதியம் 12.30 மணி: பணப்பரிமாற்றம்!

ஆன்லைன் பணப்பரிமாற்றம் உச்ச வரம்பு ரூ.9 லட்சம் ஆக நிர்ணயம்

மதியம் 12.25 மணி: வருவாய் இழப்பு!

வரி சலுகையால் ரூ.38,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நேரடி வரிகளில் அளிக்கும் சலுகை மூலம் ரூ.37,000 கோடியும் மறைமுக வரிகளில் அளிக்கும் சலுகைகள் மூலம் ரூ.1000 கோடியும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மதியம் 12.20 மணி: வருமான வரி!

ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி செலுத்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வருமான வரிக்கான உட்ச வரம்பு ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சம் வரையான வருமானத்துக்கு 5% வருமான வரி விதிப்பு.

புதிய வரி விகிதங்கள்:

  • 0 முதல் ரூ. 3 லட்சம் – வரி இல்லை
  • ரூ.3 முதல் 6 லட்சம் வரை – 5% வரி
  • ரூ.6 முதல் 9 லட்சம் வரை – 10% வரி
  • ரூ.9 முதல் 12 லட்சம் – 15% வரி
  • ரூ.12 முதல் 15 லட்சம் – 20% வரி
  • ரூ.15 லட்சத்திற்கு மேல் – 30% வரி

மதியம் 12.15 மணி: சுங்க வரி!

ஜவுளி மற்றும் விவசாயம் தவிர பிற பொருட்களின் அடிப்படை சுங்க வரி விகிதங்களின் எண்ணிக்கையை 21ல் இருந்து 13 ஆக குறைப்பு. செல்போன், கேமரா, லென்ஸ், பேட்டரி இறக்குமதிக்கான சுங்கவரி குறைப்பு. தங்கம், வெள்ளி விலை உயரும். செல்போன், டிவி விலை இனி வரும் நாட்களில் குறையும்.

மதியம் 12.10 மணி: முதியோர் சேமிப்பு திட்டம்!

முதியோர் சேமிப்பு திட்டத்தில் நிரந்தர வைப்புக்கான வரம்பு ரூ. 15 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக உயர்வு

மதியம் 12.08 மணி: எந்திரங்கள் மூலம் கழிவுகள் அகற்றம்!

நாடு முழுவதும் உள்ள அனைத்து நகரங்களிலும் எந்திரங்கள் மூலம் கழிவுகள் அகற்றப்படும் திட்டம் கொண்டுவரப்படும்.

மதியம் 12.05 மணி: கடன் உதவி!

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் தரும் வகையில் ரூ.9000 கோடி ஒதுக்கப்படும்.அடமானப்பத்திரம் ஏதுமின்றி ரூ.2 லட்சம் கோடி வரை தொழில் முனைவர் கடன் பெற முடியும்

காலை 11:55 மணி: செயற்கை நுண்ணறிவு!

Make AI in India மற்றும் Make AI work for India திட்டத்தை செயல்படுத்த சிறந்த கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவுக்கான மூன்று சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்

காலை 11:52 மணி: வட்டியில்லா கடன்!!

மாநிலங்களுக்கு 50 ஆண்டுகள் வரை வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் மேலும் 1 ஆண்டுக்கு நீட்டிப்பு

காலை 11:48 மணி: 5ஜி தொழில்நுட்பம்!!

பொறியியல் மற்றும் பொறியியல் சார்ந்த தொழில்களில் 5ஜி தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.

காலை 11:45 மணி:ரயில்வே!!

ரயில்வே துறையை மேம்படுத்த ரூ 2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு. 2013-14 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை இல்லாத வகையில் ரயில்வேக்கு ரூ. 2.4 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் பட்ஜெட்டில் தெரிவிப்பு.

காலை 11:40 மணி: மகளிர் சுய உதவி குழுக்கள்!!

நாட்டின் கிராமப்புறங்களில் 1 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் கிராம மக்களின் வாழ்கை தரம் உயர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

காலை 11:30 மணி: புதிய கல்லூரிகள்!!

நாடு முழுவதும் புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும், தேசிய டிஜிட்டல் நூலகத்தை மாநிலங்கள் பயன்படுத்த வழிவகை செய்யப்படும் என்றும், குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கு டிஜிட்டல் நூலகம் அமைக்கப்படும். ICMR நிலையங்களை தனியார் பயன்படுத்தும் வகையில் மாற்றங்கள் செய்யப்படும் என்றும், மருத்துவ உபகரணங்களை தயாரிப்பதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 740 ஏகலைவா பள்ளிகளுக்கு புதிதாக 38,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், குறிப்பாக, பழங்குடியினர் மேம்பாடு பணிகளுக்காக ரூ.15,000 கோடி மற்றும் நாட்டின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ.10 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.

காலை 11:20 மணி: விவசாயிகள் உதவித்தொகை!!

உலகிலேயே அதிக சிறுதானியங்கள் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. மேலும், விவசாயத்தை மேம்படுத்த வேளாண் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் புதிதாக தொடங்க அரசு சார்பாக ஊக்குவிக்கப்படும் என்றும், 11.4 கோடி விவசாயிகளுக்கு விவசாயத்திற்காக உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்வளத்துறைகளுக்கு ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள் மற்றும் மீன் சார்ந்த தொழில் செய்பவர்களின் வளர்ச்சிக்காக ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலை 11:10 மணி: நாட்டின் பொருளாதாரம்!!

நிதியமைச்சர் அவர்கள், இந்திய பொருளாதாரம் தற்போது 5 வது இடத்திற்கு முன்னேறி உள்ளதாக கூறியுள்ளார். மேலும், கொரோனா காலத்தில் நாட்டின் 80 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு அளிக்கப்பட்டது என்றும், ஜனவரி 2023 முதல் மேலும் 1 ஆண்டிற்கு அந்தியோதயா திட்டம் மூலம் உணவு பொருட்கள் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

காலை 11 மணி: உரை தொடக்கம்!!

சரியாக காலை 11 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்திய நாட்டின் 2023ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் உரையை தொடங்கியுள்ளார். அதில், நாட்டின் பொருளாதாரம் மிகவும் சிறப்பாக உள்ளதாக உலக நாடுகள் பாராட்டுவதாக மத்திய நிதியமைச்சர் பெருமிதம் பொங்க கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!