
Budget 2023: வீட்டுக் கடனுக்கான வரி விலக்கில் ரூ.1 லட்சம் வரை உயர்வு – வெளியாக இருக்கும் சூப்பரான அறிவிப்பு!!
தற்போது வெளியாக இருக்கும் 2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் கொரோனா பரவல், பணவீக்கம் ஆகியவற்றின் காரணமாக பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வீட்டு கடனுக்கான வரி விலக்குரிய வரம்பும் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வீட்டு கடன்
நாட்டில் 2023 – 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அதன்படி இந்த பட்ஜெட் வருகிற பிப்ரவரி 1ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு, சிறு வணிகங்களுக்கான குறைந்த விலை கடன், உள்கட்டமைப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல நிவாரணங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
மேலும் தற்போது, தனிநபருக்கான சொத்துக்களுக்கான வீட்டுக் கடனில் ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது கொரோனா பரவல் மற்றும் பணவீக்கம் ஆகிய காரணங்களுக்காக சொத்துக்களின் மதிப்பும் அதிகரித்துள்ளது. இதனால், இந்த பட்ஜெட்டில் வீட்டு கடன்களுக்கான வரி செலுத்த நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டில், வீட்டு கடன்களுக்கான வரி விலக்கு மேலும் ரூ.1 லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்பை நிதியமைச்சர் அறிவிப்பார் என கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியானால் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி அதிகரிக்கும்.