டிஜிட்டல் கரன்சி, ஒரு வகுப்பு, ஒரு சேனல் & ஸ்மார்ட்போனில் 5ஜி சேவை – பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்புகள்!

0
டிஜிட்டல் கரன்சி, ஒரு வகுப்பு, ஒரு சேனல் & ஸ்மார்ட்போனில் 5ஜி சேவை - பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்புகள்!
டிஜிட்டல் கரன்சி, ஒரு வகுப்பு, ஒரு சேனல் & ஸ்மார்ட்போனில் 5ஜி சேவை - பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்புகள்!
டிஜிட்டல் கரன்சி, ஒரு வகுப்பு, ஒரு சேனல் & ஸ்மார்ட்போனில் 5ஜி சேவை – பட்ஜெட்டில் சூப்பர் அறிவிப்புகள்!

இந்தியாவில் 2022-23 ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல முக்கிய திட்டங்கள் இடம் பெற்றுள்ளது.

பட்ஜெட் தாக்கல்:

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா உயிர்கொல்லி வைரஸ் தீவிரமெடுத்து பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரசு விதித்த ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் சரிவடைய தொடங்கியது. இந்த நிலையில் பொருளாதார வல்லுநர்கள் ஆலோசனையின் படி பொருளாதார வளர்ச்சிக்கான பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் ஆண்டுதோறும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதில் நாட்டின் அனைத்து துறைகளுக்கும் அடங்கிய பல்வேறு திட்டங்கள் இடம் பெற்றும்.

TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் – தேர்வுகளை தள்ளிவைக்க கோரிக்கை!

தற்போது 2022ம் ஆண்டு தொடங்கிய நிலையில் ஆண்டில் முதல் பட்ஜெட் தாக்கல் இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தாக்கல் செய்யும் 4வது பட்ஜெட் இதுவாகும். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அனைவரும் பெரிதும் எதிர்பார்த்த இந்த பட்ஜெட் கூட்டத்தில் பல்வேறு முக்கிய திட்டங்கள் இடம் பெற்றுள்ளது. இதில் அனைவரும் வரவேற்கும் விதமாக மகளிருக்கான முக்கிய திட்டங்கள் இடம் பெற்றுள்ளது. பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து நிதி அமைச்சர் உரை நிகழ்த்தினார்.

புதிய திட்டங்கள்:

  • 2022 – 23 ம் நிதியாண்டில் ஆர்பிஐ மூலம் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும்.
  • நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் டிஜிட்டல் பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்.
  • ஓரு வகுப்பு, ஒரு சேனல் என்ற வகையில் 200 டிவி சேனல்கள் புதிதாக உருவாக்கப்படும்.
  • மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சகி இயக்கம்,வாத்சல்யா இயக்கம், ஊட்டச்சத்து 2.0 இயக்கம் ஆகிய 3 திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
  • சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் திட்டம், வரும் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும்.
  • 5ஜி மொபைல் சேவைகள் வரும் நிதியாண்டில் கொண்டுவரப்படும்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!