Budget 2022 Live Updates : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்!

0
Budget 2022 Live Updates
Budget 2022 Live Updates
Budget 2022 Live Updates 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தனது நான்காவது மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் செய்துள்ளார். நாட்டு மக்கள் அனைவரின் பார்வையும் அவரது மீதே உள்ளது. ஐந்து மாநிலங்களில் நடக்கவிருக்கும் தேர்தல்கள், ஓமிக்ரான் அச்சுறுத்தல், புதிய பொருளாதார வளர்ச்சி மற்றும் நிதிப் பற்றாக்குறை, வரி வசூல் மற்றும் செலவுக் கண்ணோட்டம் ஆகியவை பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

01 Feb 2022, 11:32:12 AM IST

அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் 30 லட்சம் கோடி கூடுதல் உற்பத்தியை உருவாக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

01 Feb 2022, 11:15:21 AM IST

இந்த பட்ஜெட் இளைஞர்கள், பெண்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் விவசாயிகள் மீது கவனம் செலுத்துகிறது என்று நிதியமைச்சர் தெரிவித்தார். பிரதம மந்திரி கதி சக்தி மாஸ்டர் திட்டம் இந்த செயல்முறையை வழிநடத்தும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார்.

01 Feb 2022, 11:05:43 AM IST

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  இந்தியாவின் வளர்ச்சி 9.27 சதவீதமாக இருக்கும் என நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

01 Feb 2022, 10:42:32 AM IST

நாடாளுமன்றத்தில் இன்னும் சற்று நேரத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள்.

01 Feb 2022, 10:40:40 AM IST

2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் வழங்கி உள்ளது.

01 Feb 2022, 10:21:43 AM IST

பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்திற்கு வந்தடைந்தார்.

01 Feb 2022, 10:07:19 AM IST

2021-22 நிதியாண்டில் (ஏப்ரல்-மார்ச், 2022) வரி வசூலில் 9.5 சதவீத வளர்ச்சி ₹22.2 லட்சம் கோடியாக இருக்கும் என அரசாங்கம் பட்ஜெட்டை நிர்ணயித்துள்ளது. அடுத்த நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 8-8.5 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கை கணித்துள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!