BSNL ன் ரூ.447 க்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் – சலுகைகள் விவரம்!

0
BSNL ன் ரூ.447 க்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் - சலுகைகள் விவரம்!
BSNL ன் ரூ.447 க்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் - சலுகைகள் விவரம்!
BSNL ன் ரூ.447 க்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் – சலுகைகள் விவரம்!

இந்தியாவின் சிறந்த தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL நிறுவனம் ரூ.447 க்கான புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் அதிகளவு டேட்டாக்களுடன் கூடுதல் சலுகைகளையும் அளிக்கிறது.

ப்ரீபெய்ட் திட்டம்

BSNL நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு ரூ.447 கொண்ட 60 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் 100 GB கொண்ட மொத்த டேட்டா பேக்குகளுடன் இந்த திட்டம் பல சலுகைகளை அளிக்கிறது. இந்த டேட்டா திட்டங்களில் தினசரி வரம்பு கொடுக்கப்படவில்லை. இதே போன்ற திட்டங்களை ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி STV 247 மற்றும் STV 1,999 உள்ளிட்ட ப்ரீபெய்ட் திட்டங்களிலும் சில திருத்தங்களை BSNL அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சரவையில் பாஜக தலைவர் எல் முருகனுக்கு இடம் – வெளியான பெயர் பட்டியல்!

அதாவது BSNL ன் புதிய STV 447 திட்டத்தில் தொடங்கி, சில புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இது தினசரி டேட்டா கட்டுப்பாடுகள் இல்லாமல் 100 GB மொத்த டேட்டாக்களை வழங்குகிறது. இந்த மொத்த டேட்டாக்கள் முடிந்ததும், BSNL நிறுவனம் 80 kpps வேகத்தில் இணைய வேகம் இருக்கும். இது ஒரு நாளைக்கு 100 SMS களை வழங்குவதோடு BSNL ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் சந்தாவை திட்டத்தையும் வாடிக்கையாளர்கள் பெறுகிறார்கள்.

இவற்றின் மொத்த காலாவதி நாட்கள் 60 ஆகும். அதனுடன், ரூ.247 சிறப்பு கட்டணத்துடன் இப்போது 50 GB மொத்த டேட்டாவுடன் ஒரு நாளைக்கு 100 SMS செய்திகள் மற்றும் 30 நாட்களுக்கு செல்லுபடி டேட்டாக்களுடன் ஒரு நாளைக்கு 3 ஜிபி தினசரி தரவை வழங்குகிறது. இதேபோல் ரூ.1,999 ப்ரீபெய்ட் திட்டத்தில் 500 GB அதிவேக மொத்த டேட்டாக்களில் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் தினசரி 100 SMS உடன் இலவச PRBT மற்றும் வரம்பற்ற பாடல் மாற்றம், லோக்தூன் அணுகலை 60 நாட்களுக்கு வழங்குகிறது.

TN Job “FB  Group” Join Now

தவிர இந்த சேவைகளில் ஒரு நாளைக்கு 2 GB டேட்டா கிடைக்கிறது. தொடர்ந்து BSNL ன் ரூ. 447 ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ நியூஸ், ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோக்ளவுட் ஆகியவற்றை வழங்குகிறது. மறுபுறம், ஏர்டெல் இணைய சேவைகள் ரூ.456 க்கான ப்ரீபெய்ட் திட்டத்தில் அமேசான் பிரைம் வீடியோ, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் மற்றும் விங்க் மியூசிக் சலுகைகளை வழங்குகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!