BSNL நிறுவனத்தின் 300 ரூபாய்க்கும் குறைந்த ரீசார்ஜ் திட்டங்கள் – 10 ஜிபி டேட்டா! முழு விபரம் இதோ!

0
BSNL நிறுவனத்தின் 300 ரூபாய்க்கும் குறைந்த ரீசார்ஜ் திட்டங்கள் - 10 ஜிபி டேட்டா! முழு விபரம் இதோ!
BSNL நிறுவனத்தின் 300 ரூபாய்க்கும் குறைந்த ரீசார்ஜ் திட்டங்கள் - 10 ஜிபி டேட்டா! முழு விபரம் இதோ!
BSNL நிறுவனத்தின் 300 ரூபாய்க்கும் குறைந்த ரீசார்ஜ் திட்டங்கள் – 10 ஜிபி டேட்டா! முழு விபரம் இதோ!

அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் பிளான்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது 300 ரூபாய்க்கு கீழ் உள்ள பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டம் குறித்து இப்பதிவில் காண்போம்.

BSNL:

BSNL பொதுத்துறை நெட் ஒர்க் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய பயன் தரும் ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அண்மையில் BSNL ப்ரீபெய்ட் பிளான்களில் விலையை மாற்றாமல் அதற்கு பதிலாக அத்திட்டம் தரும் ஆபர்களை குறைத்தது. அதன் தொடர்ச்சியாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பைபர் வாடிக்கையாளர்களுக்கு 90% வரை தள்ளுபடியை அறிவித்தது. இந்த நிலையில் பிரபல நெட்வொர்க் நிறுவனமான ஏர்டெல் ப்ரீபெய்ட் சேவைக்கான கட்டணத்தை 25% வரை உயர்த்தியது. அதனை தொடர்ந்து வோடபோன் – ஐடியா நிறுவனமும் பிரீபெய்டு கட்டணங்களை 20 இல் இருந்து 25% வரை உயர்த்தி உள்ளது.

LPG சிலிண்டர் விலை முதல் PF தொகை வரை – டிச.1 முதல் வரப்போகும் முக்கிய மாற்றங்கள்!

நெட்வொர்க் நிறுவனங்கள் ரீசார்ஜ் பிளான்களின் விலையை உயர்த்துவது அதன் பயனர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வோடபோன், ஐடியா, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் விலை குறைந்த நெட்வொர்க் நிறுவங்களை தேடி வருகின்றனர். அந்த வகையில் ஜியோ அவர்களுக்கு கைகொடுத்துள்ளது. அடுத்ததாக அரசு நிறுவனமான BSNL குறைந்த ரீசார்ஜ் திட்டங்களை கொண்டுள்ளது. அந்த வகையில் பிஎஸ்என்எல் விலை குறைந்த 49 ரூபாய் திட்டம் 24 நாட்களுக்கு வேலிடிட்டி உடன் 2ஜிபி டேட்டா வழங்குகிறது.

மத்திய அரசின் PM KISAN ரூ.6000 உதவித்தொகை – ஆதார் கார்டை இணைப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!

அடுத்ததாக ரூ.118 ரீசார்ஜ் திட்டம் அன்லிமிடெட் காலிங், தினசரி 500 எம்பி டேட்டா ஆகிய நன்மைகளை அளிக்கிறது. ரூ.135 குரல் அழைப்பு சலுகை மற்றும் டேட்டா ஆகிய நன்மைகளை அளிக்கிறது. எஸ்டிவி 147 திட்டம் 10 ஜிபி மொத்த டேட்டா மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்களுக்கான இலவச சந்தா ஆகியவற்றை 30 நாட்களுக்கு அளிக்கிறது. அதனை தொடர்ந்து ரூ.247 ரீசார்ஜ் பிளான் 50 ஜிபி டேட்டா , தினசரி 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் காலிங் ஆகியவற்றை 56 நாட்களுக்கு வழங்குகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!