97 ரூபாயில் தினமும் 2 GB டேட்டா – BSNL ன் சூப்பர் திட்டம்!!

0
97 ரூபாயில் தினமும் 2 GB டேட்டா - BSNL ன் சூப்பர் திட்டம்!!
97 ரூபாயில் தினமும் 2 GB டேட்டா - BSNL ன் சூப்பர் திட்டம்!!
97 ரூபாயில் தினமும் 2 GB டேட்டா – BSNL ன் சூப்பர் திட்டம்!!

BSNL நிறுவனம் அதிக அளவிலான பலன்களை வாடிக்கையாளர்களுக்கு சமீப காலமாக அறிவித்து வரும் நிலையில், 100 ரூபாய்க்கும் குறைவான ப்ரீபெய்டு திட்டம் ஒன்றில் உள்ள அசத்தலான பலன்களை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

BSNL திட்டம்:

தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கினால் பல தரப்பு மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்களின் அன்றாட வாழ்விற்கான அத்தியாவசிய தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் பலர் சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில், மாணவர்களுக்கு கல்வி நிலையங்கள் ஏதும் திறக்காத நிலையில், பாடங்கள் அனைத்தும் ஆன்லைன் முறையில், கற்பிக்கப்படுகிறது. இதனால் ஏழை மக்களுக்கு உதவும் வகையில், பல தொலைத்தொடர்பு நிறுவனங்களும் பல சலுகைகளையும் அறிவித்து வருகிறது.

ஆதார் அட்டையில் பெயர், பாலினம் மாற்றம் – எளிய வழிமுறைகள் இதோ!

இந்நிலையில் BSNL நிறுவனம் வெறும் ரூ.97 க்கு தினமும் 2GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் கால்கள் மற்றும் தினமும் 100 SMS களையும் வழங்குகிறது. இந்த ப்ரீபெய்டு திட்டம் 18 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. மேலும், இந்த திட்டத்தில் கூடுதல் பலனாக லோக் தூன் செயலியின் இலவச சந்தாவும் கிடைக்கிறது.

ஜியோ திட்டம்:

BSNL நிறுவனம் வழங்கும் இதே தொகையில் ஜியோ நிறுவனம் தினமும் 1.5 GB டேட்டா, அன்லிமிடெட் கால்கள் மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது. ரூ.98 ப்ரீபெய்டு திட்டத்தில் 14 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. மேலும், ஜியோ செயலிகளை இலவச சந்தாவை வழங்குகிறது.

TN Job “FB  Group” Join Now

ஏர்டெல் மற்றும் VI :

ஏர்டெல் நிறுவனம் ரூ. 98 க்கான திட்டத்தில் 12 GB டேட்டாவை வழங்குகிறது. கூடுதலாக இந்த திட்டத்தில் அழைப்புகள் மற்றும் SMS வசதிகள் வழங்கப்படவில்லை. VI நிறுவனம் ரூ.99க்கு 18 நாட்கள் வேலிடிட்டியில் 1GB டேட்டாவை வழங்குகிறது. அன்லிமிடெட் கால்கள் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் SMS பலன்கள் ஏதும் கொடுக்கவில்லை. இவை அனைத்தையும் ஒப்பிடுகையில் BSNL நிறுவனம் வழங்கும் பலன்கள் தான் சிறப்பாக உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!