எல்லைப் பாதுகாப்புப் படை வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்..!

0
எல்லைப் பாதுகாப்புப் படை வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்..!
எல்லைப் பாதுகாப்புப் படை வேலைவாய்ப்பு - 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்..!
எல்லைப் பாதுகாப்புப் படை வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்..!

காவல் துறையில் வேலை தேடிக் கொண்டு இருப்பவர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்பு அறிவிப்பை எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Sub Inspector, Constable, Head Constable பணிகளுக்கு என மொத்தமாக 121 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய அனைத்து விவரங்களும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Border Security Force (BSF)
பணியின் பெயர் Sub Inspector, Constable, Head Constable
பணியிடங்கள் 121
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 60 Days
விண்ணப்பிக்கும் முறை Offline

 

எல்லைப் பாதுகாப்புப் படை பணியிடங்கள்:

எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) காலியாக உள்ள Sub Inspector, Constable, Head Constable பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 121 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
  • Sub Inspector – 43
  • Constable – 06
  • Head Constable – 72
    BSF கல்வி விவரம்:
  • Sub Inspector பணிக்கு மத்திய / மாநில அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Civil Engineering, Electrical Engineering பாடப்பிரிவில் Diploma Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Head Constable பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் 10ஆம் வகுப்பு அல்லது ITI படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Constable பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Diploma படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
BSF தகுதிகள்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் ஒத்த பணிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவுகளின் கீழ் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

BSF வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 52 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

BSF ஊதிய விவரம்:
  • Sub Inspector பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 6 படி குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை மாத ஊதியமாக தரப்படும்.
  • Head Constable பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 4 படி குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை மாத ஊதியமாக தரப்படும்.

  • Constable பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 3 படி குறைந்தபட்சம் ரூ.21,700/- முதல் அதிகபட்சம் ரூ.69,100/- வரை மாத ஊதியமாக தரப்படும்.
BSF தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, PET, Interview வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Join Our TNPSC Coaching Center

BSF விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த எல்லைப் பாதுகாப்புப் படை பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.

BSF Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!