Airtel வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பிராட்பேண்ட், காம்போ திட்டம் விளக்கம்!

0
Airtel வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பிராட்பேண்ட், காம்போ திட்டம் விளக்கம்!
Airtel வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு - பிராட்பேண்ட், காம்போ திட்டம் விளக்கம்!
Airtel வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பிராட்பேண்ட், காம்போ திட்டம் விளக்கம்!

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததொரு எக்ஸ்ட்ரீம் சலுகையாக பிராட்பேண்ட் திட்டத்தை ரூ.1499 மற்றும் பிளாக் சலுகையின் கீழ் ரூ.1598 க்கான காம்போ திட்டத்தையும் வழங்குகிறது. இது குறித்த விரிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டள்ளது.

ரீசார்ஜ் திட்டம்:

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் அதன் வாடிக்கையாளர்களுக்கு நான்கு வகையான ஏர்டெல் பிளாக் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் கீழ் ஏர்டெல் பயனர்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப ரீசார்ஜ் திட்டங்களைத் தனிப்பயனாகவும், ஃபைபர், DTH மற்றும் மொபைல் சேவைகளில் இருந்து தேர்வு செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளது. அதாவது ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் ஏர்டெல் பிளாக் என்ற செயல்பாட்டை அறிமுகப்படுத்தியது. இது ஃபைபர், DTH மற்றும் மொபைல் சேவைகளை ஒரே சேவையின் கீழ் இணைக்க பயனர்களை அனுமதிக்கிறது.

IRCTC உடன் ஆதார் எண் இணைப்பு – எளிய வழிமுறைகள் இதோ!

இந்த ஃபைபர் திட்டங்கள் ரூ.499 இல் தொடங்கி 1 Gbps வரை வேகத்தையும் அன்லிமிடெட் டேட்டவையும், லேண்ட்லைன் இணைப்போடு தருகின்றன. மேலும் DTH திட்டம் ரூ.153 இல் தொடங்கி, முதல் ரீசார்ஜில் ரூ.465 தள்ளுபடியை வழங்குகிறது. இப்போது ஏர்டெல் ரூ.1598 விலையில் ஆன ஏர்டெல் பிளாக் திட்டத்தை பட்டியலிட்டுள்ளது. இது 2 போஸ்ட்பெய்ட் இணைப்புகள் மற்றும் ஒரு பிராட்பேண்ட் திட்டத்தை வழங்குகிறது. இரண்டு போஸ்ட்பெய்ட் இணைப்புகளை பொருத்தளவு ஒரு வழக்கமான கணக்கு மற்றும் ஒரு கூடுதல் கணக்கு ஆகியவை அடங்கும்.

அவை 105 GB டேட்டாவையும் அன்லிமிடெட் அழைப்புகளையும் அளிக்கிறது. இவ்வகை திட்டங்களில் உள்ள பிராட்பேண்ட் இணைப்பு 200 Mbps வேகம், அமேசான் பிரைம் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப்பின் ஒரு வருட சந்தாவையும் வழங்குகிறது. அடுத்ததாக ஏர்டெல் ரூ.1499 க்கான அல்ட்ரா பிராட்பேண்ட் திட்டத்தை பொருத்தளவு அன்லிமிடெட் டேட்டாவை 300 Mbps வேகத்துடன், அன்லிமிடெட் உள்ளூர் மற்றும் STD அழைப்புகளை வழங்குகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்த பிராட்பேண்ட் திட்டங்கள் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் உடன் 4k TV யில் 10,000+ திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் மற்றும் 7 OTT பயன்பாடுகள் மற்றும் 5 ஸ்டுடியோக்களின் அசல் தொடர்களையும் உள்ளடக்கியது. தவிர பொழுதுபோக்கு பயன்பாட்டில் அல்ட்ரா மற்றும் VIP திட்டங்களான அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் Zee 5 சேவைகளுக்கான அணுகலுடன் லயன்ஸ்கேட், வூட் பேசிக், ஈரோஸ் நவ், ஹங்காமா ப்ளே, ஷெமரூ மீ மற்றும் அல்ட்ரா உள்ளிட்ட ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் OTT, ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாடான விங்க் மியூசிக் சேவைகளுக்கான அணுகலை வழங்குகிறது. இந்த சேவைகளை தொடர்ந்து அணுக DTH சந்தா கட்டாயமாகும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here