10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு காத்திருக்கும் அரசு வேலை – 800+ காலிப்பணியிடங்கள் !

1
10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு காத்திருக்கும் அரசு வேலை - 800+ காலிப்பணியிடங்கள் !
10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு காத்திருக்கும் அரசு வேலை - 800+ காலிப்பணியிடங்கள் !
10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு காத்திருக்கும் அரசு வேலை – 800+ காலிப்பணியிடங்கள் !

எல்லை சாலைகள் அமைப்பானது (BRO) வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. Store Keeper Technical, Multi Skilled Worker ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 876 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். கல்வி, வயது, ஊதியம் போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Border Roads Organisation (BRO)
பணியின் பெயர் Store Keeper Technical, Multi Skilled Worker
பணியிடங்கள் 876
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.08.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
எல்லை சாலைகள் அமைப்பு பணியிடங்கள்:

Store Keeper Technical பணிக்கு 377 பணியிடங்களும், Multi Skilled Worker (Driver Engine Static) பணிக்கு 499 பணியிடங்களும் என மொத்தமாக 876 பணியிடங்கள் எல்லை சாலைகள் அமைப்பில் (BRO) காலியாக உள்ளது. மேலும் இந்த காலிப்பணியிடங்கள் ஆண்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exams Daily Mobile App Download
SKT, MSW கல்வி விவரம்:
 • Store Keeper Technical பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • Multi Skilled Worker பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
SKT, MSW வயது விவரம்:
 • Store Keeper Technical பணிக்கு குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • Multi Skilled Worker பணிக்கு குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதுக்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • SC / ST – 05 வருடம், OBC – 03 வருடம், PWD – 10 வருடம் என வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவலை அறிவிப்பில் பார்க்கவும்.

SKT, MSW ஊதியம்:
 • Store Keeper Technical பணிக்கு Pay Level 2 படி ரூ.19,900/- முதல் ரூ.63,200/- வரை என்றும்.
 • Multi Skilled Worker பணிக்கு Pay Level 1 படி, ரூ. 18,000/- முதல் ரூ.56,900/- வரை என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
Border Roads Organisation தேர்வு செய்யும் விதம்:
 • Written Exam
 • Physical Efficiency Test
 • Practical / Trade Test

TNPSC Coaching Center Join Now

Border Roads Organisation விண்ணப்ப கட்டணம்:
 • விண்ணப்பதாரர்கள் அனைவரும் ரூ.50/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
 • SC / ST பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
Border Roads Organisation விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 10.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here