BRO எல்லை சாலைகள் அமைப்பில் 240+ காலிப்பணியிடங்கள் – ஆண்களுக்கு முன்னுரிமை!

0
BRO எல்லை சாலைகள் அமைப்பில் 240+ காலிப்பணியிடங்கள் - ஆண்களுக்கு முன்னுரிமை!
BRO எல்லை சாலைகள் அமைப்பில் 240+ காலிப்பணியிடங்கள் - ஆண்களுக்கு முன்னுரிமை!
BRO எல்லை சாலைகள் அமைப்பில் 240+ காலிப்பணியிடங்கள் – ஆண்களுக்கு முன்னுரிமை!

எல்லை சாலைகள் அமைப்பு (BRO) கீழ் இயங்கி வரும் பொது இருப்பு பொறியாளர் படை (GREF) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Draughtsman, Supervisor, Hindi Typist போன்ற பல்வேறு பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 246 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே எளிமையான முறையில் தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Border Roads Organization (BRO), General Reserve Engineer Force (GREF)
பணியின் பெயர் Draughtsman, Supervisor, Hindi Typist and Others
பணியிடங்கள் 246
விண்ணப்பிக்க கடைசி தேதி With in 45 Days
விண்ணப்பிக்கும் முறை Offline

 

எல்லை சாலைகள் அமைப்பு காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், பொது இருப்பு பொறியாளர் படையில் (GREF) காலியாக உள்ள Draughtsman, Supervisor (Administration, Stores, Cipher), Hindi Typist, Operator (Communication), Electrician, Welder, and Multi Skilled Worker (Black Smith, Cook) ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 246 பணியிடங்கள் ஆண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

BRO-GREF வயது விவரம்:

  • Multi Skilled Worker பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் வயது தளர்வு பற்றிய கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.

எல்லை சாலைகள் அமைப்பு கல்வி விவரம்:

  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Draughtsman, Hindi Typist பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Supervisor (Administration, Stores, Cipher) பணிக்கு பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Operator (Communication), Electrician, Welder, Multi Skilled Worker பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

BRO-GREF ஊதிய விவரம்:

இப்பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

எல்லை சாலைகள் அமைப்பு தேர்வு செய்யும் விதம்:

Written Test, Physical Efficiency Test மற்றும் Practical Test (Trade Test) ஆகிய தேர்வு முறைகளின் மூலம் இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

BRO-GREF விண்ணப்ப கட்டணம்:

  • விண்ணப்பதாரர்களிடம் ரூ.50/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • SC / ST / PwBD பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

எல்லை சாலைகள் அமைப்பு விண்ணப்பிக்கும் விதம்:

ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

Commandant GREF Centre,
Dighi camp,
Pune- 411 015.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!