திருப்பதியில் பிரம்மோற்சவ விழா – இலவச தரிசன டிக்கெட் குறித்து ஆலோசனை!

0
திருப்பதியில் பிரம்மோற்சவ விழா - இலவச தரிசன டிக்கெட் குறித்து ஆலோசனை!
திருப்பதியில் பிரம்மோற்சவ விழா - இலவச தரிசன டிக்கெட் குறித்து ஆலோசனை!திருப்பதியில் பிரம்மோற்சவ விழா - இலவச தரிசன டிக்கெட் குறித்து ஆலோசனை!
திருப்பதியில் பிரம்மோற்சவ விழா – இலவச தரிசன டிக்கெட் குறித்து ஆலோசனை!

ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பக்தர்களுக்கு டிக்கெட் விநியோகம் செய்வது மற்றும் பிற முன்னேற்பாடு பணிகள் குறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் நடைபெற்றது

திருப்பதி:

திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் கொரோனா தாக்கத்திற்கு பிறகு பக்தர்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க முன்பதிவு அடிப்படையில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த மே மாதம் கோடை காலம் என்பதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது அதனால் திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் சுமார் 29 அறைகளில் 16 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது. மேலும் அதிகரித்த பக்தர்கள் எண்ணிக்கையால் பிரசாத லட்டுக்கும் பற்றாக்குறை நிலவியது. அதனால் லட்டுகள் விற்பனைக்கு தேவஸ்தானம் கட்டுப்பாடுகளை விதித்தது.

Exams Daily Mobile App Download

தற்போது தேவஸ்தான இணையதளம் வாயிலாக ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வெளியானது. வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது. இந்த நிலையில் வரும் செப்டம்பர் 27 ம் தேதி திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்க உள்ளார்கள். இந்த ஆண்டு பல லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.

WhatsApp பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை – போலி அப்டேட்!

மேலும் விழா ஏற்பாடுகள் குறித்து பேசிய அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி, தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் டோக்கன் இன்றி நேரடியாக தரிசனத்துக்கு அனுப்பப்படுவது தொடரும். பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் தரிசனம் வழங்க முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். திருப்பதியில் டைம்ஸ்லாட் கவுன்ட்டர்கள் அமைப்பது குறித்து விரிவான ஆய்வு நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். திருமலையில் உள்ள ஸ்ரீ பேடி ஆஞ்சநேயர் சுவாமி மூல மூர்த்தியின் செப்புக் கவசங்களுக்கு தங்க முலாம் பூசும் பணி ரூ.18.75 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here