BPNL நிறுவனத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – 740+ காலிப்பணியிடங்கள்…!

0

BPNL நிறுவனத்தில் ரூ.35,000/- ஊதியத்தில் வேலை – 740+ காலிப்பணியிடங்கள்…!

பாரதிய பசுபாலன் நிகாம் லிமிடெட் (BPNL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Regional Manager, District Manager, Tehsil Manager & Executive Manager E Commerce பணிக்கான காலிப்பணியிடங்க நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் Regional Manager பணிக்கு 17 பணியிடம், District Manager பணிக்கு 66 பணியிடம், Executive Manager E Commerce பணிக்கு 04 பணியிடம் மற்றும் Tehsil Manager பணிக்கு 660 பணியிடம் என மொத்தமாக 747 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10 ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு அல்லது டிகிரி ஆகியவற்றில் பணிக்கு தேவையான ஏதேனும் ஒன்றை படித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் கல்வித் தகுதி குறித்து முழுமையான விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 21 என்றும் அதிகபட்சம் 45 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேலும் Regional Manager பணிக்கு ரூ.944/-, District Manager பணிக்கு ரூ.826/-, Tehsil Manager பணிக்கு ரூ.708/- மற்றும் Executive Manager E Commerce பணிக்கு ரூ.826/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவம் பெற்று பூர்த்தி செய்து 10.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!