கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவ ஊழியர்களுக்கு ஊக்கமதிப்பெண் – ஐகோர்ட் புதிய உத்தரவு!!
கொரோனா காலத்தில் பணியாற்றிய மருந்தாளர்களுக்கு ஊக்கமதிப்பெண் வழங்கப்படாத நிலையில் ஐகோர்ட் முக்கிய உத்தரவினை வெளியிட்டுள்ளது.
ஊக்கமதிப்பெண்:
தமிழகத்தில் கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு இரண்டு ஆண்டுகள் சேவையாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் மருந்தாளுநர்களுக்கு தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலமாக நடத்தப்படும் தகுதித் தேர்வில் ஐந்து மதிப்பெண் ஊக்க மதிப்பெண்ணாக வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அறிவித்தார்.
நவ.23 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாணவர்களுக்கு குஷியான அப்டேட்!!
இந்நிலையில், தற்போது 986 மருந்தாளர் பணி நியமன ஆணையை மருத்துவ பணிகள் தேர்வு ஆணையம் வெளியிட உள்ளது. ஆனால், தற்போது வரையிலும் கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு சேவையாற்றிய மருந்தாளர்களுக்கு அரசு அறிவித்தபடி ஊக்க மதிப்பெண் வழங்கப்படவில்லை என மருந்தாளர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் மருந்தாளருக்கான பணி நியமன உத்தரவுகளை பிறப்பிக்க அரசுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.