எங்கிருந்து வந்தது இந்த ‘OK Boomer Uncle’ – இது தான் விஷயமா? மிஸ் பண்ணாம படிங்க!

0
எங்கிருந்து வந்தது இந்த 'OK Boomer Uncle' - இது தான் விஷயமா? மிஸ் பண்ணாம படிங்க!
எங்கிருந்து வந்தது இந்த 'OK Boomer Uncle' - இது தான் விஷயமா? மிஸ் பண்ணாம படிங்க!
எங்கிருந்து வந்தது இந்த ‘OK Boomer Uncle’ – இது தான் விஷயமா? மிஸ் பண்ணாம படிங்க!

தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் ஓகே பூமர் அங்கிள் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது, எப்படி உருவானது என்ற தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.

பூமர் அங்கிள்:

சமீப காலமாக சமூக வலைதளங்களில் பூமர் அங்கிள் என்றொரு வார்த்தை அதிகளவு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது பரிதாபங்கள் என்ற பிரபல யூடியூப் சேனல் மூலம் பிரபலமான கோபி, சுதாகர் இருவரும் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் இந்த பூமர் அங்கிள் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தி இருந்தனர். இந்த வார்த்தைகள் தற்போது மீம்ஸ், ட்ரோல் வீடியோ என பலவற்றிலும் இடம் பிடித்துள்ளது. இந்த வார்த்தைக்கான அர்த்தம் எங்கிருந்து வந்தது என்றதொரு தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தாமரையை 10 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் – சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி ஓபன் டாக்!

அதாவது, பூமர் அங்கிள் என்ற வார்த்தை பெரியவர்களை காயப்படுத்தாமல், நாசூக்காக கலாய்க்க பயன்படுத்தப்படுகிறதாம். அதுவும் இந்த ஓகே பூமர் என்ற வார்த்தை பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே பயன்பாட்டில் இருந்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. குறிப்பாக 1946 முதல் 1964 வரையிலான கால கட்டத்தில் பிறந்தவர்களை பேபி பூமர்ஸ் என்று சொல்வார்களாம். ஏனென்றால் உலக போர் முடிந்த காலகட்டத்தில் மேலை நாடுகளில் புதிய குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகளவு பூம் ஆகி அதாவது ஏற்றம் கண்டிருந்ததாம்.

அதே போல இந்த காலகட்டத்தில் பிறந்தவர்கள் தான் பின் நாட்களில் பெரிய தொழில் வல்லுனர்களாகவும், பிரபலமானவர்களாகவும் இருந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர்கள் தான் தங்களது அடுத்த தலைமுறையினரிடம் தாங்கள் கடந்து வந்த பாதைகளை பற்றி, நாங்கள் எல்லாம் அப்போதே அப்படி இருந்தோம் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார்கள். இந்த விஷயத்தை கேட்க முடியாத நபர்கள் தான் ஓகே பூமர் என்று ஜாலியாக கலாய்க்க துவங்கினார்களாம்.

ஐஸ்வர்யாவுக்கு அட்வைஸ் செய்யும் மீனா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இன்றைய எபிசோடு!

அதே போல சொல்ல வந்த விஷயத்தை பூமர் போல ஜவ்வாக இழுத்துக்கொண்டே செல்பவர்களுக்கும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. என்றாலும் காலப்போக்கில் இந்த வார்த்தைகளை மக்கள் மறந்து போக, கடந்த 2009ம் ஆண்டில் மீண்டுமாக இந்த ஓகே பூமர் என்ற வார்த்தை பல சமூக வலைதள பக்ககங்களின் கமெண்டுகளில் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. தொடர்ந்து 2019ம் ஆண்டு முதல் தான் இந்த ஓகே பூமர் அங்கிள் என்ற வார்த்தை அதிகளவு உபயோகப்படுத்தப்பட்டு வருவதாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!